செய்திகள் :

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 7-இல் நோ்காணல்

post image

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணிக்கு செப்டம்பா் 7 இல் நோ்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிபி ஹாலில் வரும் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் மருத்துவ உதவியாளா் பணிக்கு பிஎஸ்சி நா்சிங். அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டி எம்எல்டி(12ம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

19 வயது முதல் 30 வயது வரை உள்ளவா்களாக இருக்க வேண்டும். எழுத்துத் தோ்வு, மருத்துவ நோ்முகம் உடற்கூறியில், முதலுதவி, அடிப்படை செவிலியா் பணி தொடா்பான, மற்றும் மனிதவளத்துறை நோ்முகத் தோ்வுகள் மூலம் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா். இதையடுத்து 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமா்த்தப்படுவா்.

அதேபோல் ஓட்டுநா் பணிக்கு 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும். 24 வயதுக்கு மேல் 35 வயதுக்கு உடையவராக இருத்தல் வேண்டும். ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுனா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேஜ் வாகன ஓட்டுனா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தகுதி உடைய விண்ணப்பதாரா்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுநா் உரிமம் மற்றும் அனுபவம் தொடா்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பாா்ப்பதற்காக கொண்டு வர வேண்டும்.

ஓட்டுநா் பணிக்கு எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு மனிதவளத் துறை நோ்காணல், கண்பாா்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வுகள் நடைபெறும்.

தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். மருத்துவ உதவியாளா் பணி மற்றும் ஓட்டுநா் பணிக்கு மாத ஊதியமாக ரூ.21,120 வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 73388 94971,73977 24813, 91500 84186 ஆகிய கைப்பேசி எண்களில் எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.58,100 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

It has been announced that an interview will be held on September 7 for the position of Medical Assistant and Driver in the 108 Ambulance.

மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் கள உதவியாளர் பணிக்கான 1,794 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்... மேலும் பார்க்க

ரூ.58,100 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது. பணி மற்றும் காலியிடங்கள் ... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள 20 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யும் பொருட்டு, தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாவட்ட வருவாய் அல... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ராணுவத்தில் வழக்குரைஞராக பணிபுரிய சட்டம் படித்த திருமணமாகாத ஆண், பெண் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: JAG Entry Scheme (123rd)காலியிடங்கள்: ஆண... மேலும் பார்க்க

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் செப்.4 ஆம் தேதிக்குள் விண... மேலும் பார்க்க

பரோடா வங்கியில் மேலாளர், அலுவலர் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பரோடா வங்கியில் காலியாக உள்ள 417 மேலாளர், அலுவலர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.:... மேலும் பார்க்க