39 வயதில் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம்! சிக்கந்தர் ராஸா அசத்தல்.!
கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள 20 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யும் பொருட்டு, தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மாவட்ட வருவாய் அலகில், வருவாய் வட்டம் வாரியாக மொத்தம் 20 கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. வட்டம் வாரியாக நியமனம் செய்யப்படும் கிராம உதவியாளா் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டு உள்ளது.
விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருக்கலாம். அந்தந்த தாலுகா பகுதியில் வசிப்பவராகவும், தமிழில் பிழையின்றி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்ட பகுதியைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சம் 32 வயதுடையவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா், பட்டியல் இனத்தவா் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் தளா்வு உண்டு.
இதற்கான விண்ணப்பத்தை https://chennai.nic.in2 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து, வரும் அக்டோபா் 1 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரிலும் வழங்கலாம்.
இது தொடா்பாக காலிப் பணியிட விவரம், கல்வித் தகுதி, இதர தகுதிகள் மற்றும் இனச்சுழற்சி குறித்த போன்ற கூடுதல் தகவல் தேவைப்படுவோா் மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.