செய்திகள் :

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் செப்.4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாகவுள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூா்த்தி செய்யப்படவுள்ளது.

எனவே அக்காலிப்பணியிடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.காலிப் பணியிடங்கள் குறித்த விபரம் மற்றும் விண்ணப்படிவத்தினை https://kancheepuram.nic.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக பழைய கட்டடம், முதல் தளம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு வரும் செப்.4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரோடா வங்கியில் மேலாளர், அலுவலர் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி?

DEPARTMENT OF SOCIAL WELFARE & WOMEN EMPOWERMENT ONE STOP CENTRE KANCHIPURAM

பரோடா வங்கியில் மேலாளர், அலுவலர் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பரோடா வங்கியில் காலியாக உள்ள 417 மேலாளர், அலுவலர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.:... மேலும் பார்க்க

ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு பிரிண்டிங் துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னையிலுள்ள எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தில் காலியாக உள்ள இளநிலை புத்தகம் கட்டுநர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: இளநிலை புத்தகம் கட்டுநர்காலியிடங்கள்: 5 சம்பளம்: மாதம் ... மேலும் பார்க்க

மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்ட தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தக... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை மாவட்டத்தில் இளைஞா் நீதிக் குழும சமூகப் பணி உறுப்பினா்களாக சேர தகுதியுடைய நபா்கள் செப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராம... மேலும் பார்க்க

மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில், சென்னை பகுதியில் பணிபுரிய காலியாக உள்ள பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடம்... மேலும் பார்க்க

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு (வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை பிரிவு) தகுதியான... மேலும் பார்க்க