மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே
கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேற்றம்: டாப் 2-இல் கில், ரோஹித் நீடிப்பு!
ஐசிசியின் ஒருநாள் பேட்டர்களின் தரவரிசைப் பட்டியலில் கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேறியுள்ளார்.
இந்தியாவின் ஷுப்மன் கில், ரோஹித் சர்மா முதலிரண்டு இடங்களில் நீடிக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன் சதம் அடித்தார்கள்.
இதனையொட்டி மூவருமே தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார்கள். டிராவிஸ் ஹெட் ஓரிடம் முன்னேறி 11-ஆவது இடத்திலும் மிட்செல் மார்ஷ் நான்கு இடங்கள் முன்னேறி 44-ஆவது இடத்திலும் கேமரூன் க்ரீன் நாற்பது இடங்கள் முன்னேறி 78-ஆவது இடத்திலும் இருக்கிறார்கள்.
ஜோஷ் இங்லீஷ் 23 இடங்கள் முன்னேறி 64-ஆவது இடத்தில் இருக்கிறார்.
ஒருநாள் பேட்டர்கள் ஐசிசி தரவரிசைப் பட்டியல்
1. ஷுப்மன் கில் - 784 புள்ளிகள்
2. ரோஹித் சர்மா - 756 புள்ளிகள்
3. பாபர் அஸாம் - 739 புள்ளிகள்
4. விராட் கோலி - 736 புள்ளிகள்
5. டேரில் மிட்செல் - 720 புள்ளிகள்