செய்திகள் :

ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்... புச்சி பாபு தொடரில் சதமடித்த ருதுராஜ்!

post image

புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான சதத்தினை பதிவு செய்துள்ளார்.

சிஎஸ்கேவின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் காயம் காரணமாக 80 சதவிகித போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.

தற்போது, காயம் குணமாகிய அவர் புச்சிபாபு தொடரில் விளையாடி வருகிறார்.

மகாராஷ்டிர அணிக்காக விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் அசத்தலாக 122 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்களும் அடித்துள்ளார். இவரும் குல்கர்னியும் இணைந்து 220 ரன்கள் குவித்தார்கள்.

இறுதியில், ருதுராஜ் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணியில் நீண்ட நாள்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Ruturaj Gaikwad scores a brilliant ton, holding the innings together, 100* (122) against Himachal Pradesh in the Buchi Babu Tournament 2025-26

நியூசி. வீரர் வில் ஓ’ரூர்க் காயம்: கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

நியூசிலாந்து வீரர் வில்லியம் ஓ’ரூர்க் காயம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில் ஓ'ரூர்க், முதுகில் ஏற்பட்ட காயம் கார... மேலும் பார்க்க

4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!

ஜிம்பாப்வே ஜாம்பவான் பிரண்டன் டெய்லர் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளதை அந்த அணி நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, ... மேலும் பார்க்க

3 பிஎச்கே படத்தை ரசித்தேன்! சச்சின்

3 பிஎச்கே திரைப்படத்தை பார்த்து ரசித்ததாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.நடிகர் சித்தார்த்தின் 40-வது படமாக உருவான 3பிஎச்கே திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியி... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!

ஆசியக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குக... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: இந்திய வம்சாவளி ஜதீந்தர் சிங் தலைமையில் ஓமன் அணி!

ஆசியக் கோப்பைக்கான ஓமன் அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியின் கேப்டனாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜதீந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆ... மேலும் பார்க்க

பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!

பிசிசிஐ மற்றும் டிரீம் 11 இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ... மேலும் பார்க்க