மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!
நியூசி. வீரர் வில் ஓ’ரூர்க் காயம்: கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!
நியூசிலாந்து வீரர் வில்லியம் ஓ’ரூர்க் காயம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில் ஓ'ரூர்க், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று மாதங்கள் வரை ஓய்வெடுக்க நேரிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஓ'ரூர்க்கிற்கு காயம் ஏற்பட்டது.
மிகவும் கடுமையான காயம் இல்லை என்றபோதிலும் அவர் மூன்று மாதங்கள் வரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர், அக்டோபரில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர் மற்றும் நவம்பரில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக அவர் அணிக்குத் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 வயதான ஓ'ரூர்க், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அறிமுகமானார்.
அப்போதிலிருந்து 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.