செய்திகள் :

Diamond Hunting: ஆந்திராவில் `வைர வேட்டை' - மழைக்காலங்களில் கிடைக்கும் வைரம்? -படையெடுக்கும் மக்கள்

post image

ஆந்திராவின் வைரம் விளையும் மண்ணாக ராயலசீமா கருதப்படுகிறது. ராயலசீமா பகுதியில் பெய்து வரும் மழை, கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடும் பருவமாக மாறியுள்ளது.

இந்த மழைக் காலங்களில் பூமியில் வைரம் கிடைக்கும் எனற நம்பிக்கையில் பலரும் அந்தப் பகுதிகளில் வைர வேட்டையை தொடங்கியிருக்கின்றனர்.

வைரக் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்ற ஜோனகிரி, துக்காலி, பெரவலி மண்டலங்களில் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க ஆர்வமுள்ள கிராமவாசிகள், வியாபாரிகள், வெளியூர் மக்கள் என பலரும் வைரத்தை தேடி வருகின்றனர்.

வைரக் கல் கண்டெடுத்தவர்
வைரக் கல் கண்டெடுத்தவர்

ராயலசீமாவில் வைரமா?

வைரம் என்பது 100% கார்பனில் இருந்து உருவாகும் ஒரு படிகம். இது பூமியின் அடியில் சுமார் 150–200 கிமீ ஆழத்தில், அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையில் உருவாகிறது.

ராயலசீமா பகுதியில் பழமையான எரிமலை இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை கிம்பர்லைட் குழாய்கள் (Kimberlite pipes) போன்ற அமைப்புகளை உருவாக்கியிருக்கலாம்.

இந்த குழாய்கள் காலப்போக்கில் மண்ணின் கீழ் புதைந்து வைரக் கற்களை உருவாக்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலகில் முதன்முதலில் இந்தியாவில்தான் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக கோல்கொண்டா, பல்லாரி, பண்ணா, ராயலசீமா பகுதிகள் வைரங்களுக்கு பெயர் பெற்றவை. அந்த வைர கற்கள் மழைக்காலங்களில் மண் அரிப்பு காரணமாக வெளியே தெரிவதாகக் கூறப்படுகிறது.

வைரம் கிடைத்தவர்கள்?

"நீங்கள் ஒரு வைரக் கல்லைத் கண்டுபிடித்தாலும், அது உங்கள் வாழ்க்கையையே திருப்பிப்போட்டுவிடும். நான் 2018-ல் வைர கற்களைக் கண்டுபிடித்தேன். அதில் ஒன்றை ரூ8 லட்சத்துக்கு இந்த ஆண்டு விற்றேன்.

இந்த வைரக்கல் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது," என்கிறார் தெலுங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் பாரத் பலோட்.

வைரக் கல்
வைரக் கல்

சமூக சேவகியான தீபிகா துசகாந்தி, ``நான் இந்தப் பகுதில் ஒரு வைரக் கல்லை கண்டெடுத்தேன். அதை ரூ.5 லட்சத்துக்கு விற்று ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவழித்தேன்.

இந்த ஆண்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைரக் கல் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஏராளமான குழந்தைகள் கல்விக்காக காத்திருக்கிறார்கள்." என்றார்.

தொல்பொருள் ஆராய்ச்சி மாணவரான நமன், ``நான் தெலுங்கு வரலாற்றைப் படிக்க வந்த மாணவன். எனது படிப்புக்கு நிதியளிக்கவும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகவும் உதவும் என்ற நம்பிக்கையில் வைர கற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

காவல்துறை என்ன சொல்கிறது?

இந்த வைர வேட்டை குறித்து கர்னூல் டிஐஜி கோயா பிரவீன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் வைரங்கள் பற்றிய நாட்டுப்புறக் கதைகள் நிறைய இருக்கின்றன.

வேலைக்காக வெளியூர் செல்லும் மக்கள் கூட மழைக்காலங்களில் சொந்த ஊர் வந்துவிடுகிறார்கள். வைரம், அதிகப் பணம் சம்பந்தப்பட்டிருந்தாலும் எந்த குற்றங்களும் இதுவரை பதிவாகவில்லை.

சில நேரங்களில் கிராமவாசிகள் நிலத்தை தங்களுடையது என்று கூறிக்கொள்வார்கள். சில சமயங்களில் வெளியூர் ஆள்கள் ஊருக்குள் வரக்கூடாது எனப் பிரச்னை நடக்கும். ஆனால் இதுவரை பெரிய தகராறுகள் அல்லது குற்றச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`குருவாயூர் கோயில் குளத்தில் கால் கழுவி ரீல்ஸ் எடுத்த பிக்பாஸ் ஜாஸ்மீன் ' - புனிதப்படுத்த சடங்கு

பியூட்டி & லைஃப் ஸ்டைல் வீடியோக்களின் மூலம் புகழ்பெற்றவர் ஜாஸ்மீன் ஜாபர். மலையாள பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்டு மூன்றாமிடம் பிடித்து செய்திகளிலும், ஊடகங்களிலும் வைரலானவர். தொடர்ந்து சமூக ஊடகங்கள... மேலும் பார்க்க

மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டி

மும்பை கொங்கன் பகுதிமகாராஷ்டிராவில் வரும் புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. இவ்விழாவிற்காக மும்பையில் இருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்... மேலும் பார்க்க

ஒரு குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரைப் பணயம் வைத்து சென்ற செவிலியர் - குவியும் பாராட்டுகள்!

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக காட்டாற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் செவிலியரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. காதைக் கிழிலும் இரைசல... மேலும் பார்க்க

அம்மா உடன் முதல் விமானப் பயணம்: "நீங்கள் இல்லாமல் நான் இல்லை" - நெகிழ்ந்த விமானி!

ஆந்திராவைச் சேர்ந்த விமானி ஒருவர், பயணிகள் முன்னிலையில் பைலட் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஆதரவு அளித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்து பெருமைப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. ... மேலும் பார்க்க

விநாயகர் விசர்ஜனம்: ``மண்சிலைக்கு திரும்பினாதான் எங்க வாழ்க்கையும், பூமியும் நல்லா இருக்கும்''

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாறு, பட்டு கண்ணம் செஞ்ச மண்ணு அது பொன்னூறு, காது செஞ்ச மண்ணு அது மேலூறு…அடடா இப்பெல்லாம் எங்க மண்ணில் சிலை செய்வாங்க?, இந்த காலத்துல போய் மண்ணை மிதிச்சு ரெடி பண்ணி நாள் கணக்க... மேலும் பார்க்க

Viral Video: ''அவரின் புன்னகை ஒரு மந்திரம்'' - Instagram-ல் வைரலாகும் பாட்டி வீடியோ; பின்னணி என்ன?

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உருக்கியது. அதைப் பகிர்ந்தவர் கான்டென்ட் கிரியேட்டர் சஞ்சிதா அகர்வால். அந்த வீடியோவில், சஞ்சிதா தனது காரை ஓட்டி கொண்டி... மேலும் பார்க்க