முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!
ஹாட்ரிக் வெற்றியைக் கொடுப்பாரா மோகன்லால்? ஹிருதயப்பூர்வம் டிரைலர்!
மோகன்லால் நடிப்பில் உருவான ஹிருதயப்பூர்வம் திரைப்படம் ஓணம் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடித்து முடித்துள்ளார்.
‘ஹ்ருதயப்பூர்வம்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.
ஓணம் வெளியீடாக இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை (ஆக.28) திரைக்கு வருகிறது. இறுதியாக மோகன்லால் நடித்த எம்புரான் மற்றும் துடரும் ஆகிய திரைப்படங்கள் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.
ஹிருதயப்பூர்வம் படமும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்று மோகன்லாலுக்கு ஹாட்ரிக் வெற்றியைத் தருமா என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. மோகன்லாலின் வசனமும் உடல்மொழியும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இதையும் படிக்க: கெனிஷா கடவுள் கொடுத்த வரம்: ரவி மோகன்