செய்திகள் :

ஆ.ராசா திறந்துவைத்த பஸ் ஸ்டாப்; `கட்டுமான செலவை விட விளம்பர செலவு அதிகம்போல...'- எழுந்த விமர்சனம்!

post image

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி கனவு தற்போது சாத்தியப்பட்டிருக்கிறது. ஊட்டியில் உள்ள இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்து கட்டப்பட்டிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது ‌. பேருந்துக்காக மழையிலும் குளிரிலும் நோயாளிகள் வெட்டவெளியில் காத்துக்கிடக்க வேண்டிய துயரம் தொடர்ந்து வந்தது.

பயணிகள் நிழற்குடை

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் நிழற்குடை கட்டித் தரப்படும் என நீலகிரி எம்.பி. ஆ.‌ராசா தரப்பில் அறிவிப்பு வெளியானது . மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள பட்ஃபயர் பகுதியில் ஊட்டி- கூடலூர் சாலையின் இரு மருங்கிலும்‌ இரண்டு யணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டன. தலா 6 லட்சம் ரூபாய் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் பயணியர் நிழற்குடைகளை நீலகிரி எம்.பி. ஆ. ராசா ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் முதல் அரசு கொறடா வரை பலரும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

தகரம் மாதிரியான பொருளைக் கொண்டு மூன்று பக்க சுற்றுச்சவர் மற்றும் ஒற்றை கூரை அமைக்க தலா 6 லட்சம் ரூபாய் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் செலவானதா என மக்கள் பலரும் கேள்வி எழுப்புவதுடன், கட்டுமான செலவை விட திறப்பு விழா உள்ளிட்ட விளம்பர செலவு அதிகம் போல என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பயணிகள் நிழற்குடை

இந்த சர்ச்சை குறித்து பதில் அளித்த பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் ரமேஷ் , " 2023 - 2024 - ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் பகுதியில் 5.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. அதைவிட கூடுதல் வசதிகளுடன் தற்போதைய 2025- 2026 - ம் ஆண்டு 6 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. நல்ல தரத்தில் தான் கட்டப்பட்டுள்ளது" என்றார்.

பஞ்சாப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்; முதல்வர் நெகிழ்ச்சிப் பதிவு; பஞ்சாப் முதல்வர் சொன்னது என்ன?

முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பள்ளிகளில் காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தை 15.9.2022 அன்று மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு கா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: கவின்குமார் தந்தையுடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவன்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவீன்குமாரின் தந்தை சந்திரசேகரை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். கவினின் குடு... மேலும் பார்க்க

பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா பராமரிப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோயிலாறு அணை. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை மாவட்டத்தின் மிக... மேலும் பார்க்க

கர்நாடகா: ஒரே எண்ணில் 4 ஆடம்பர கார்கள், ஆன்லைன் பந்தயத் தளங்கள்; காங்கிரஸ் MLA கைதின் பின்னணி என்ன?

கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.சி. வீரேந்திரா, “பப்பி” என அழைக்கப்படும் இவர், சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய வியாபாரம் மற்றும் பணமோசடி வழக்கில் சிக்கி அமலாக்க இயக்குநரால் (ED) ஆகஸ்... மேலும் பார்க்க

``தூய்மைப் பணியாளர்கள் வரலட்சுமி உயிரிழப்பு; அரசின் அலட்சியம்தான் காரணம்'' - சீமான் குற்றச்சாட்டு

சென்னைகண்ணகிநகர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 23) மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். இந்த மரணத்திற்கான காரணம் அரசின் அலட்சியம் மற்றும... மேலும் பார்க்க

`தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் வீட்டுவிடுங்கள்'- சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கடந்த 11ம் தேதி டெல்லி தெருநாய்கள் விவகாரத்தில் பிறப்பித்திருந்த உத்தரவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தெருநாய்களை பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்கும்படி உத்தரவிட்ட... மேலும் பார்க்க