செய்திகள் :

திட்டமிட்டதற்கு முன்பே பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை நிறைவு!

post image

சென்னை பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனை நிறைவடைந்தாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"​சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகளை நிறைவு செய்துள்ளது. ​

இந்தச் சோதனைகள் மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கான சான்றிதழைப் பெறுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி, ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை (RDSO - Research Designs and Standards Organisation) சேர்ந்த அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் 16, 2025 அன்று தொடங்கிய இந்த சோதனைகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதிமதிப்பீடு செய்யப்பட்டது. அத்துடன், வழித்தடத்தில் ரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன்(verification of traction and braking performance) பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்பட்டது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது:

1. பயணத் தரம் (Ride quality): மெட்ரோ ரயிலில் பயணிப்பது பயணிகளுக்கு எவ்வளவு வசதியானது என்பதை அறிய, மெட்ரோ ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளத்தின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டது.

2. பயணிகளின் பாதுகாப்பு (Passenger Safety): மின்சாரம், காற்றழுத்தம் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், பிரேக் அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த ரயில் கட்டுமானமும் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறதா என்பதை அறிக்கை சரிபார்க்கிறது.

மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும்போது, அதன் வடிவமைப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதை இந்த வெற்றிகரமான சோதனைகள் நிரூபிக்கின்றன.

​மேலும், திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாகவே சோதனைகள் நிறைவடைந்துள்ளது. இது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாதுகாப்பு மற்றும் தர நிலைகளை பின்பற்றியுள்ளது என்பதை நிரூபிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

Chennai Metro Rail Completed Trials Ahead of Schedule in Poonamalli - Porur route

நீலகிரி, கோவையில் 3 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. • இன்று (26-08-2025) காலை 5.30 மணியளவில், ஒரிசா கடலோரப்பகுதியை தாண்டி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளி... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானார்!

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஆக.27) காலை காலமானார். அவருக்கு வயது 79.கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு மகனாக... மேலும் பார்க்க

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1,000 காவலர்கள் குவிப்பு!

ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலமா? கே.என். நேரு பதில்

திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலம் இருந்தால் அதனை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியிருக்கிறார்.விரிவுபடுத்தப்பட்ட காலை உண... மேலும் பார்க்க

யுபிஐ, உணவு டெலிவரி... ஓடிபி எண் கேட்கத் தடையில்லை! - மதுரைக் கிளை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஓடிபி பெறுவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது. ஸ்விக்கி, சொமெட்டோ போன்ற தனியார் நிறுவனங்கள்... மேலும் பார்க்க

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!

கோவை: கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து கடத்திச் சென்ற வேனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை பிடித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாமல் ... மேலும் பார்க்க