3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்...
"ஆமாம், என் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது" - மனம் திறந்த சச்சின்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் இடையிலான நிச்சயதார்த்தம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர், சானியா சந்தோக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற பேச்சுகள் அரசல் புரசலாக கசிந்து வந்தது. சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் தனிப்பட்ட முறையில் நடைபெற்றதாகவும், இரு குடும்பத்தினர் மற்றும் இரு குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வரும் என்றும் விரைவில் இவர்களது திருமணம் குறித்து அறிவிப்பு வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து 'Reddit' தளத்தில் ரசிகரின் கேள்விக்கு மனம் திறந்து பேசியிருக்கும் சச்சின், "ஆமாம், என் மகன் அர்ஜுனுக்கு நிச்சயதார்தம் நடந்து முடிந்தது உண்மைதான். அர்ஜுன் அவரது வாழ்வில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைப்பதைப் பார்க்க உற்சாகத்துடன் காத்திருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.
அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் செய்து கொள்ளும் சானியா பிரபல தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர். சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருக்கும் சானியா, பாவ்ஸ் பெட் ஸ்பா & ஸ்டோர் எல்எல்பி நிறுவனத்தின் பங்குதாரராகவும், இயக்குனராகவும் இருக்கிறார். சானியாவின் ரவி காய் குடும்பம் ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் உணவு வர்த்தகத்தில் சிறந்து விளங்குகிறது.

இவர்களது குடும்பத்திற்கு இண்டர்காண்டினண்டல் என்ற ஹோட்டல் இருக்கிறது. இது தவிர புரூக்ளின் க்ரீமெரி என்ற ஐஸ் கிரீம் பிராண்ட் கடைகளும் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...