சிவாஜி கணேசன் குடும்பத்துடன் திருமண பந்தத்தில் இணையும் தெலுங்கு நடிகர் குடும்பம்...
Deepika Padukone: சமூக வலைத்தளத்தில் மகளின் படம்; ரகசியமாக வீடியோ எடுத்தவருடன் தீபிகா வாக்குவாதம்
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து அக்குழந்தையை வெளியுலகிற்குக் காட்டாமல் தீபிகா படுகோனே வளர்த்து வருகிறார்.
குழந்தையின் புகைப்படம் கூட வெளியாகவில்லை. யாரும் தனது குழந்தையை போட்டோ எடுக்க வேண்டாம் என்று தீபிகா படுகோனே பத்திரிகையாளர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி இது வரையாரும் போட்டோ எடுத்து வெளியிடவில்லை.
தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர் சிங் மற்றும் குழந்தையுடன் மும்பை விமான நிலையத்தில் விமானத்தில் காத்திருந்தார். அந்நேரம் அவரது குழந்தை தீபிகா படுகோனேயின் மடியில் அமர்ந்திருந்தது.

தீபிகா படுகோனேயின் குழந்தை முகம் தெளிவாகத் தெரிந்தது. அதனை விமானநிலையத்தில் நின்ற மற்றொரு நபர் ரகசியமாக வீடியோ எடுத்தார். தீபிகாவிற்குப் பின்புறம் இருந்து அந்த நபர் வீடியோ எடுப்பதை தீபிகா படுகோனே பார்த்துவிட்டார். உடனே வீடியோ எடுத்த நபருடன் தீபிகா படுகோனே வீடியோ எடுப்பதை நிறுத்தும்படி கூறினார்.
அதோடு அந்த நபருடன் தீபிகா படுகோனே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் வீடியோ எடுத்த நபர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுவிட்டார்.
அந்த வீடியோ வைரலானது. ஆனால் தீபிகா படுகோனேயின் ஒப்புதல் இல்லாமல் அவரது குழந்தையின் புகைப்படத்தை வெளியிதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு அந்த வீடியோவை உடனே சமூக வலைத்தளத்தில் இருந்து அகற்றும்படி நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது வெட்கக்கேடானது என்று ஒரு நெட்டிசன் தெரிவித்துள்ளார். மற்றொருவர் பெற்றோரின் அனுமதி இன்றி குழந்தையின் புகைப்படத்தை வெளியிட யாருக்கும் உரிமை கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது நபர் தெரிவித்துள்ள கருத்தில், ''தீபிகா படுகோனே தனது குழந்தையின் புகைப்படத்தை யாரும் போட்டோ எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அப்படி இருந்தும் அவரது புகைப்படத்தை எடுத்து வெளியிடுவது மரியானதான காரியம் இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
தீபிகா படுகோனேயும், ரன்வீர் சிங்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தீபிகா படுகோனேயைப் போன்று நடிகை ஆலியா பட்டும் தனது மகளின் புகைப்படத்தை யாரும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு ஆலியா பட் தானே தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...