பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!
குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழ்நாடு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று 2 நாள் அரசு முறைப் பயணமாக, தமிழ்நாட்டுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 3 ஆம் தேதி, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினரகாப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இந்தப் பயணத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் வருகையால், அவர் செல்லும் இடங்களில் மாநில மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகள் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டிரம்ப் வரி: பிற பொருள்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் இதன் விலை மட்டும் மாறாதது ஏன்?