செய்திகள் :

சிவாஜி கணேசன் குடும்பத்துடன் திருமண பந்தத்தில் இணையும் தெலுங்கு நடிகர் குடும்பம்; பின்னணி என்ன?

post image

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பமும் தெலுங்கு நடிகர் சாய் குமார் குடும்பமும் திருமண பந்தத்தில் இணைகிறது. இந்தத் திருமணம் வரும் 28ம் தேதி அதாவது நாளை மறுதினம் சென்னையில் நடைபெற இருக்கிறது.

நடிகர் சிவாஜி கணேசனின் ஒரேயொரு உடன் பிறந்த சகோதரி பத்மாவதி. இவரது கணவர் வேணுகோபால். சாந்தி திரையரங்கம் இருந்த போது அதன் மேலாளராக இருந்து அதன் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் இவர்தான்.

இந்த பத்மாவதி - வேணுகோபால் தம்பதியின் மகள்தான் பிரபுவின் சகோதரர் ராம்குமாரின் மனைவி. இப்போது திருமணத்துக்குத் தயாராகியிருக்கும் மாப்பிள்ளை, பத்மாவதி -வேணுகோபாலின் மகன் வயிற்றுப் பேரன் கோகுல்.

நடிகர் சாய் குமார்
நடிகர் சாய் குமார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பமும் தெலுங்கு நடிகர் சாய் குமார் குடும்பமும் திருமண பந்தத்தில் இணைகிறது. இந்தத் திருமணம் வரும் 28ம் தேதி அதாவது நாளை மறுதினம் சென்னையில் நடைபெற இருக்கிறது.

நடிகர் சிவாஜி கணேசனின் ஒரேயொரு உடன் பிறந்த சகோதரி பத்மாவதி. இவரது கணவர் வேணுகோபால். சாந்தி திரையரங்கம் இருந்த போது அதன் மேலாளராக இருந்து அதன் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் இவர்தான்.

இந்த பத்மாவதி - வேணுகோபால் தம்பதியின் மகள்தான் பிரபுவின் சகோதரர் ராம்குமாரின் மனைவி. இப்போது திருமணத்துக்குத் தயாராகியிருக்கும் மாப்பிள்ளை, பத்மாவதி -வேணுகோபாலின் மகன் வயிற்றுப் பேரன் கோகுல்.கோகுலுக்கும் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டாலும் தமிழ், கன்னடப் படங்களிலும் நடித்திருக்கும் பிரபல நடிகர் சாய் குமாரின் உடன் பிறந்த சகோதரரான ஐயப்பா பி சர்மாவின் மகள் கமலா ஹாசினிக்கும்தான் திருமணம் நடக்கவிருக்கிறது.

ஐயப்பா பி சர்மாவுமே தெலுங்குப் படங்களில் நடித்திருப்பவர்தான்.

சென்னை தியாகராய நகரிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடக்கவிருக்கிற இந்தத் திருமணம் காதல் திருமணம் என்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"கேப்டன் பிரபாகரன்ல கடத்தல்காரன்தான் வில்லன்; ஆனா புஷ்பால.." - இயக்குநர் பேரரசு சொல்வது என்ன?

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100-வது திரைப்படமான இத்திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது.இப்படத்துக்குப் ப... மேலும் பார்க்க

"கேப்டன் பிரபாகரன் படத்தின் 2 ஆம் பாகம்... புஷ்பா படத்தால நிறுத்தினோம்" - இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100-வது திரைப்படமான இத்திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது.இப்படத்துக்குப் ப... மேலும் பார்க்க

3BHK: '3BHK திரைப்படம் என்னுடைய சமீபத்திய பேவரைட்!'; சச்சின் சொன்ன வார்த்தை - நெகிழும் இயக்குநர்

சித்தார்த், சரத்குமார், தேவயாணி, மீதா ரகுநாத் ஆகியோர் நடிப்பில் உருவான '3BHK' திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. வீடு வாங்கி விட வேண்டும் என்ற கனவுகளோடு ஓடும் ஒரு நடுத்தர குடும்பத்தின் ... மேலும் பார்க்க

டப்பிங் யூனியனிலிருந்து நடிகர் ராஜேந்திரன் சஸ்பெண்ட்; காரணம் இதுதானா?!

டப்பிங் யூனியனில் இருந்து டப்பிங் கலைஞரும் நடிகருமான ராஜேந்திரன் ஒரு மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இணைச் செயலாளர், துணைத் தலைவர் என அந்த யூனியனில் பல பொறுய்ப்புகளை வகித்த அவர் மீது எடுக்கப... மேலும் பார்க்க

Simran: "திருமணமானால் நடிக்க முடியாது என்பதெல்லாம் இப்போது கிடையாது!" - சிம்ரன் ஷேரிங்ஸ்

சிம்ரனுக்கு இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல் எனச் சொல்லலாம். 'டூரிஸ்ட் பேமிலி', 'குட் பேட் அக்லி' என அடுத்தடுத்து இந்தாண்டில் க்ளாப்ஸ் வாங்கியிருந்தார் சிம்ரன். அவர் திரையுலகில் அறிமுகமான ‘சனம் ஹர்ஜை’ திரைப்... மேலும் பார்க்க

Swasika: "ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டார்கள்!" - ஸ்வாசிகா சொல்லும் தகவல்

'லப்பர் பந்து' திரைப்படத்திற்குப் பிறகு பயங்கர பிஸியாக வலம் வருகிறார் நடிகை ஸ்வாசிகா. 'லப்பர் பந்து' திரைப்படத்தில் கதாநாயகி சஞ்சனாவுக்கு அம்மாவாக நடித்து அந்தக் கதாபாத்திரத்திற்கு அத்தனை நியாயம் சேர்... மேலும் பார்க்க