வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!
பிகாரில் பத்தாவது நாளாக நடைபெறும் வாக்குரிமைப் பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று (ஆக. 26) 10வது நாளை எட்டியுள்ளது.
பத்தாவது நாளாக இன்று நடைபெறும் வாக்குரிமைப் பேரணியில் ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி, முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ மற்றும் பிற இந்தியா கூட்டணித் தலைவர்களும் ஒன்றிணைந்துள்ளனர்.