ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏடிஎச்டி கோளாறு! ஏன்? அறிகுறிகள் என்ன?
இயக்குநராகும் முழுத் தகுதியும் மணிகண்டனுக்கு உண்டு: சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் மணிகண்டன் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் ரவி மோகனை வாழ்த்தி வருவதுடன் அவருடனான தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
அப்போது, நிகழ்வில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தில் நானும் நடிக்க ஆசைப்படுகிறேன். அவர் சரி என்றால் இப்போதே முன்பணம் வாங்கிவிடுவேன். ரவி மோகன் இயக்குநராகவும் ஆகிவிட்டார். நடிகர் கார்த்திக்கு அந்த ஆசை இருக்கிறது எனத் தெரியும். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நடிகர் மணிகண்டனும் இயக்குநராக வேண்டும் என விருப்பப்படுகிறேன். அதற்காக முழுத் தகுதியும் அவருக்கு உண்டு” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: கடவுளை முட்டாளாக்க முடியாது! ரவி மோகனைச் சாடும் ஆர்த்தி?