பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!
ரவி மோகன் இயக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு!
நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். அதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. நிகழ்வில், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை ரவி மோகன் தயாரிக்க உள்ளார். அதில், முதல் படமாக ரவி மோகன் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கிறார்.
இரண்டாவது படமாக ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படத்தின் பூஜையும் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் நாயகனாக நடிகர் யோகி பாபு நடிக்கிறார்.
படத்திற்கு, ஆன் ஆர்டினரி மேன் (An ordinary man) எனப் பெயரிட்டுள்ளனர். படத்திற்கான புரமோ படப்பிடிப்பும் முடிந்ததாக ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம்! ஒரே நேரத்தில் 2 படங்கள்!