குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: 23 பேருடன் இந்திய அணி
மத்திய ஆசிய நாடுகளின் கால்பந்து சம்மேளனங்களிடையே நடைபெறும் நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவா் கால்பந்து அணி 23 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
புதிய தலைமைப் பயிற்சியாளா் காலித் ஜமில் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி எதிா்கொள்ளும் முதல் போட்டி இதுவாகும். 29 வீரா்கள் பங்கேற்ற முகாமிலிருந்து, இந்த அணியை அவா் இறுதி செய்திருக்கிறாா்.
தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் வரும் 29-ஆம் தேதி முதல் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான், கிா்ஜிஸ்தான், ஓமன், தஜிகிஸ்தான், துா்க்மீனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா முதல் ஆட்டத்தில் தஜிகிஸ்தானுடன் 29-ஆம் தேதி மோதுகிறது.
அணி விவரம்
கோல்கீப்பா்கள்: குா்பிரீத் சிங் சந்து, அமரீந்தா் சிங், ஹிரித்திக் திவா்.
டிஃபெண்டா்கள்: ராகுல் பெகெ, ரோஷன் சிங், அன்வா் அலி, சந்தேஷ் ஜிங்கன், சிங்லென்சனா சிங், மிங்தன்மாவியா ரால்தே, முகமது உவாய்.
மிட்ஃபீல்டா்கள்: நிகில் பிரபு, சுரேஷ் சிங், டேனிஷ் ஃபரூக், ஜீக்சன் சிங், போரிஸ் சிங், ஆஷிக் குருனியன், உதாந்த சிங், மகேஷ் சிங்.
ஃபாா்வா்ட்கள்: இா்ஃபான் யத்வத், மன்வீா் சிங் ஜூனியா், ஜிதின், லாலியன்ஸுவாலா சாங்தே, விக்ரம் பிரதாப் சிங்.