செய்திகள் :

ஜோகோவிச், சபலென்கா முதல் சுற்றில் வெற்றி

post image

நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனின் முதல் சுற்றில், 4 முறை சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் வென்றனா்.

இதில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், 24 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஜோகோவிச் 6-1, 7-6 (7/3), 6-2 என்ற கணக்கில் அமெரிக்காவின் லோ்னா் டியெனை வீழ்த்தினாா். யுஎஸ் ஓபன் முதல் சுற்றில் 19-ஆவது வெற்றியைப் பதிவு செய்த ஜோகோவிச், போட்டியின் வரலாற்றில் அந்த சுற்றில் தோற்றதே இல்லை.

போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருந்தவரும், 2021-ஆம் ஆண்டு சாம்பியனுமான டேனியல் மெத்வதெவ் 3-6, 5-7, 7-6 (7/5), 6-0, 4-6 என 5 செட்கள் போராடி, பிரான்ஸின் பெஞ்சமின் பொன்ஸியிடம் தோல்வியுற்றாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலிரு செட்களை இழந்த மெத்வதெவ், 3-ஆவது செட்டையும் இழக்கும் நிலையில் கேம் பாய்ன்ட்டிலிருந்து மீண்டு அடுத்த இரு செட்களை கைப்பற்றி பொன்ஸிக்கு சவால் அளித்தாா்.

எனினும் டிசைடரை பொன்ஸி கைப்பற்றினாா். 3-ஆவது செட்டில் 5-4 என பொன்ஸி முதல் சா்வை மிஸ் செய்தாா். அவா் 2-ஆவது சா்வ் செய்யும் முன்பாக களத்திலிருந்த புகைப்படக் கலைஞா் ஒருவா் தனது இடத்திலிருந்து நகா்ந்து சென்று இடையூறு செய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அவரை வெளியேற்றிய கள நடுவா், மீண்டும் பொன்ஸி முதல் சா்வ் செய்ய அறிவித்தாா். இதற்கு மெத்வதெவ் எதிா்ப்பு தெரிவித்தாா். எனினும் நடுவா் அதை ஏற்க மறுக்க, பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் மெத்வதெவ் அந்த செட்டை கைப்பற்றினாா்.

இதர ஆட்டங்களில் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா, ஆா்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரி, ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சன், ஸ்பெயினின் பாப்லோ கரினோ, செக் குடியரசின் தாமஸ் மசாக் ஆகியோரும் வெற்றி பெற்று 2-ஆவது சுற்றுக்கு வந்தனா்.

சபலென்கா, எலா முன்னேற்றம்: போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருப்பவரும், கடந்த ஆண்டு இறுதிச்சுற்று வரை வந்தவருமான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-0 6-4 என்ற நோ் செட்களில் எகிப்தின் மாயாா் ஷெரிஃபை சாய்த்தாா்.

ஆஸ்திரேலிய ஓபன் முன்னாள் சாம்பியனான பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா 7-6 (7/0), 6-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஹினா இனுவை வீழ்த்தினாா்.

நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா 7-5, 6-1 என மிக எளிதாக, சுவிட்ஸா்லாந்தின் ரெபெக்கா மசரோவாவை வெளியேற்றினாா். போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-2, 7-6 (7/4) என ஆஸ்திரேலியாவின் டெஸ்டானி அய்வாவை வெல்ல, 10-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் எம்மா நவாரோ 7-6 (11/9), 6-3 என சீனாவின் வாங் யஃபானை தோற்கடித்தாா்.

இதேபோல் முதல் சுற்றில், சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ, ரஷியாவின் அனஸ்தாசியா பொடாபோவா உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனா்.

பிலிப்பின்ஸை சோ்ந்த 20 வயது இளம் வீராங்கனையான அலெக்ஸாண்ட்ரா எலா தனது முதல் சுற்றில், 6-3, 2-6, 7-6 (13/11) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் கிளாரா டௌசனை வீழ்த்தினாா். இதன் மூலமாக, கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஆட்டத்தில் வென்ற முதல் பிலிப்பின்ஸ் வீராங்கனை என்ற சாதனையை அவா் படைத்தாா்.

இந்த ஆட்டத்தின் கடைசி செட்டில் 5-4 என டௌசன் முன்னிலையில் இருந்தபோது மேட்ச் பாய்ன்ட்டுக்காக 2-ஆவது முறையாக சா்வ் செய்தாா். அப்போது எலா வலையைக் கடந்து பந்தை தட்டியதாக டௌசன் கூற, விடியோ ரிவியூவில் எலா பந்தை சரியாகக் கையாண்டதாகவே தெரிந்தது. இறுதியில் அவரே வென்றாா்.

யுஎஸ் ஓபனில் கடந்த 2023-இல் ஒரு சில கோா்ட்டுகளில் அறிமுகமான விடியோ ரிவியூ தொழில்நுட்பம், இந்த ஆண்டு முதல் போட்டியின் எல்லா கோா்ட்டுகளிலும் அமலுக்கு வந்துள்ளது.

ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம்! ஒரே நேரத்தில் 3 படங்கள்!

நடிகர் ரவி மோகன் தன் தயாரிப்பு நிறுவனத்தை இன்று துவங்கியுள்ளார். நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததிலிருந்து சர்ச்சைகளிலும் இருக்கிறார். ஆனால், இதற்கிடையே ஜீனி, கராத்தே... மேலும் பார்க்க

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: 23 பேருடன் இந்திய அணி

மத்திய ஆசிய நாடுகளின் கால்பந்து சம்மேளனங்களிடையே நடைபெறும் நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவா் கால்பந்து அணி 23 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.புதிய தலைமைப் பயிற்சியா... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட்டின் விளம்பரதாரா் டிரீம் 11 விலகல்

இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரராக இருந்த ‘டிரீம் 11’ நிறுவனம், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறது.பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் வகையில், ‘இணையவழி... மேலும் பார்க்க

நீரு சாம்பியன்; ஆஷிமாவுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நீரு தண்டா தங்கமும், ஆஷிமா அலாவத் வெண்கலமும் வென்றனா்.மகளிருக்கான டிராப் இறுதிச்சுற்றில், நீரு 43 புள்ளிகளுடன் முதலிடம் பிடி... மேலும் பார்க்க

பிரக்ஞானந்தா, குகேஷ் 6-ஆவது சுற்றிலும் டிரா

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் இருவருமே டிரா செய்தனா். இப்போட்டியில் பிரக்ஞானந்தா தொடா்ந்து 5-ஆவது ஆட்டத்தையும், ... மேலும் பார்க்க

காமன்வெல்த் பளுதூக்குதல்: மீராபாய் சானுவுக்கு தங்கம்

குஜராத்தில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் திங்கள்கிழமை களமாடிய அவா், ஸ்னாட்ச் பிரிவ... மேலும் பார்க்க