செய்திகள் :

"கேப்டன் பிரபாகரன் படத்தின் 2 ஆம் பாகம்... புஷ்பா படத்தால நிறுத்தினோம்" - இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

post image

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’.

விஜயகாந்தின் 100-வது திரைப்படமான இத்திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது.

இப்படத்துக்குப் பிறகே விஜயகாந்த் 'கேப்டன் விஜயகாந்த்' என்று அழைக்கப்பட்டார்.

இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி, ஃபிலிமில் எடுக்கப்பட்ட அப்படம் டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலிஸாகி இருக்கிறது.

கேப்டன் பிரபாகரன்
கேப்டன் பிரபாகரன்

இந்நிலையில் நேற்று ( ஆகஸ்ட் 25) விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, பேரரசு மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் திரையரங்கில் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய படத்தின் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மிகப்பெரிய அங்கிகாரம் கிடைத்திருக்கிறது.

நிறையப் பேர் படத்தைப் பார்த்திருக்கிறார்கள். இது விஜயகாந்த் சாரின் கடினமான உழைப்புக்குக் கிடைத்த அங்கிகாரம்.

70 வயது உள்ளவர்களும் படம் பார்க்க வருகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

இப்போது இருக்கிற 2K கிட்ஸ்க்குப் படம் பிடிக்குமா? பிடிக்காதா? என்ற ஒரு சந்தேகம் இருந்தது.

ஆர். கே. செல்வமணி
ஆர். கே. செல்வமணி

ஆனால் அவர்களும் படம் பார்க்க வந்து டான்ஸ் எல்லாம் ஆடினார்கள். ஒரு திருவிழா மாதிரி இந்தப் படத்தை என்ஜாய் செய்தார்கள். இதெல்லாம் எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான்.

‘கேப்டன் பிரபாகரன்’ பாகம் 2 எடுக்கலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் 'புஷ்பா' படம் வந்ததால் அதனை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டோம்.

சண்முகப் பாண்டியன் அப்பா மாதிரியே நடிக்கிறாரே அவரை வைத்து எடுக்கலாம் என்றெல்லாம் தோன்றியது.

அதற்கேற்ற மாதிரி கதையை உருவாக்கி விரைவில் ‘கேப்டன் பிரபாகரன்’ 2 பாகம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சிவாஜி கணேசன் குடும்பத்துடன் திருமண பந்தத்தில் இணையும் தெலுங்கு நடிகர் குடும்பம்; பின்னணி என்ன?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பமும் தெலுங்கு நடிகர் சாய் குமார் குடும்பமும் திருமண பந்தத்தில் இணைகிறது. இந்தத் திருமணம் வரும் 28ம் தேதி அதாவது நாளை மறுதினம் சென்னையில் நடைபெற இருக்கிறது.நடிகர் ச... மேலும் பார்க்க

"கேப்டன் பிரபாகரன்ல கடத்தல்காரன்தான் வில்லன்; ஆனா புஷ்பால.." - இயக்குநர் பேரரசு சொல்வது என்ன?

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100-வது திரைப்படமான இத்திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது.இப்படத்துக்குப் ப... மேலும் பார்க்க

3BHK: '3BHK திரைப்படம் என்னுடைய சமீபத்திய பேவரைட்!'; சச்சின் சொன்ன வார்த்தை - நெகிழும் இயக்குநர்

சித்தார்த், சரத்குமார், தேவயாணி, மீதா ரகுநாத் ஆகியோர் நடிப்பில் உருவான '3BHK' திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. வீடு வாங்கி விட வேண்டும் என்ற கனவுகளோடு ஓடும் ஒரு நடுத்தர குடும்பத்தின் ... மேலும் பார்க்க

டப்பிங் யூனியனிலிருந்து நடிகர் ராஜேந்திரன் சஸ்பெண்ட்; காரணம் இதுதானா?!

டப்பிங் யூனியனில் இருந்து டப்பிங் கலைஞரும் நடிகருமான ராஜேந்திரன் ஒரு மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இணைச் செயலாளர், துணைத் தலைவர் என அந்த யூனியனில் பல பொறுய்ப்புகளை வகித்த அவர் மீது எடுக்கப... மேலும் பார்க்க

Simran: "திருமணமானால் நடிக்க முடியாது என்பதெல்லாம் இப்போது கிடையாது!" - சிம்ரன் ஷேரிங்ஸ்

சிம்ரனுக்கு இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல் எனச் சொல்லலாம். 'டூரிஸ்ட் பேமிலி', 'குட் பேட் அக்லி' என அடுத்தடுத்து இந்தாண்டில் க்ளாப்ஸ் வாங்கியிருந்தார் சிம்ரன். அவர் திரையுலகில் அறிமுகமான ‘சனம் ஹர்ஜை’ திரைப்... மேலும் பார்க்க

Swasika: "ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டார்கள்!" - ஸ்வாசிகா சொல்லும் தகவல்

'லப்பர் பந்து' திரைப்படத்திற்குப் பிறகு பயங்கர பிஸியாக வலம் வருகிறார் நடிகை ஸ்வாசிகா. 'லப்பர் பந்து' திரைப்படத்தில் கதாநாயகி சஞ்சனாவுக்கு அம்மாவாக நடித்து அந்தக் கதாபாத்திரத்திற்கு அத்தனை நியாயம் சேர்... மேலும் பார்க்க