செய்திகள் :

3BHK: '3BHK திரைப்படம் என்னுடைய சமீபத்திய பேவரைட்!'; சச்சின் சொன்ன வார்த்தை - நெகிழும் இயக்குநர்

post image

சித்தார்த், சரத்குமார், தேவயாணி, மீதா ரகுநாத் ஆகியோர் நடிப்பில் உருவான '3BHK' திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.

வீடு வாங்கி விட வேண்டும் என்ற கனவுகளோடு ஓடும் ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை திரையில் கொண்டு வந்திருந்தார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். திரையரங்கத்தில் வெளியான சமயத்திலும், ஓ.டி.டி-யில் வெளியான சமயத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

3BHK படத்தில்
3BHK படத்தில்...

தற்போது ரெடிட் சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விகளுக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் பதில் தந்திருக்கிறார்.

அவருக்கு பிடித்த உணவு, சமீபத்தில் பிடித்த திரைப்படம் என ரசிகரின் கேள்விக்கு பதில் தந்திருக்கிறார்.

அப்படி பிடித்த திரைப்படம் தொடர்பான கேள்விக்கு சச்சின், "எனக்கு நேரம் கிடைக்கும்போது திரைப்படங்களைப் பார்ப்பேன். அப்படி சமீபத்தில் எனக்கு '3BHK' திரைப்படமும் 'Ata Thambyacha Naay' என்ற மாராத்திய திரைப்படமும் பிடித்திருந்தது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தன்னுடைய திரைப்படத்தை சச்சின் பார்த்து பாராட்டியிருப்பது குறித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பதிவு போட்டிருக்கிறார்.

அந்த பதிவில் அவர், "ரொம்பவே நன்றி சச்சின் சார். நீங்கள்தான் என்னுடைய குழந்தை பருவத்தின் ஹீரோ. இந்த வார்த்தை எங்களுக்கு மிகப்பெரியது." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

டப்பிங் யூனியனிலிருந்து நடிகர் ராஜேந்திரன் சஸ்பெண்ட்; காரணம் இதுதானா?!

டப்பிங் யூனியனில் இருந்து டப்பிங் கலைஞரும் நடிகருமான ராஜேந்திரன் ஒரு மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இணைச் செயலாளர், துணைத் தலைவர் என அந்த யூனியனில் பல பொறுய்ப்புகளை வகித்த அவர் மீது எடுக்கப... மேலும் பார்க்க

Simran: "திருமணமானால் நடிக்க முடியாது என்பதெல்லாம் இப்போது கிடையாது!" - சிம்ரன் ஷேரிங்ஸ்

சிம்ரனுக்கு இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல் எனச் சொல்லலாம். 'டூரிஸ்ட் பேமிலி', 'குட் பேட் அக்லி' என அடுத்தடுத்து இந்தாண்டில் க்ளாப்ஸ் வாங்கியிருந்தார் சிம்ரன். அவர் திரையுலகில் அறிமுகமான ‘சனம் ஹர்ஜை’ திரைப்... மேலும் பார்க்க

Swasika: "ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டார்கள்!" - ஸ்வாசிகா சொல்லும் தகவல்

'லப்பர் பந்து' திரைப்படத்திற்குப் பிறகு பயங்கர பிஸியாக வலம் வருகிறார் நடிகை ஸ்வாசிகா. 'லப்பர் பந்து' திரைப்படத்தில் கதாநாயகி சஞ்சனாவுக்கு அம்மாவாக நடித்து அந்தக் கதாபாத்திரத்திற்கு அத்தனை நியாயம் சேர்... மேலும் பார்க்க

``திமுகவை இன்று ஆதரிக்க வேண்டிய தேவை இருக்கிறது, ஏனென்றால்'' - அமீர் விளக்கம்

திரைப்பட இயக்குநர் அமீர் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், "இவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்கள். திமுகவை எதிர்த்து பேசவே மாட்டார்கள் ... மேலும் பார்க்க

மதராஸி: ``அனிருத் எனக்கு நண்பருக்கும் மேல; அவர் field out ஆகிட்டால்'' - நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி' படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையி... மேலும் பார்க்க