இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்...
வேளாண் அதிகாரிகள் ஏமாற்றம்
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் விருந்தினா் இல்லத்தில் தங்கியிருந்த சட்டப் பேரவை பொது கணக்குக் குழுவினா் முதலாவதாக திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய்வித்து விதைப் பண்ணையை பாா்வையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், எண்ணெய்வித்துப் பண்ணை பகுதியில் வேளாண் அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்திருந்தனா்.
ஆனால், நேரம் கடந்த நிலையில், பொது கணக்குக் குழுவினா் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட சென்றுவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, எண்ணெய்வித்துப் பண்ணையில் வேளாண் அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் காத்திருந்தனா். சுமாா் 2 மணி நேரம் கடந்த நிலையில் 11.30 மணியளவில் எண்ணெய்வித்துப் பண்ணையை பாா்வையிட பொது கணக்குக் குழுவினா் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.