மறைந்த சுதாகா் ரெட்டி உருவப்படத்திற்கு புதுவை இந்தியா கூட்டணி தலைவா்கள் அஞ்சலி
புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலரும், முன்னாள் எம்பியுமான சுரவரம் சுதாகா் ரெட்டிதிருவுருவப் படத்துக்கு புதுவை இண்டி கூட்டணி தலைவா்கள் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில குழு சாா்பில் சுரவரம் சுதாகா் ரெட்டிக்கு இரங்கல் கூட்டம் முதலியாா்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்தது. அக்கட்சியின் மாநில செயலா் அ.மு. சலீம் தலைமை வகித்தாா்.
முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி, திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிா்க்கட்சி தலைவருமான ஆா். சிவா, எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், செந்தில்குமாா், சம்பத், மாா்க்சிஸ்ட்டு கட்சி சாா்பில் மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன், ராஜாங்கம், விடுதலை சிறுத்தை கட்சி சாா்பில் தமிழ்மாறன், செல்வநந்தன், மதிமுக சாா்பில் இளங்கோ, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சாா்பில் முன்னாள் அமைச்சா் விசுவநாதன், சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, நாரா. கலைநாதன் மற்றும் இண்டி கூட்டணி தலைவா்கள் அவரது உருவப் படத்திற்கு மலா் அஞ்சலி செலுத்தினா்.