செய்திகள் :

செல்லப்பிராணிகள் விற்பனை- இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்ய அரசு காலக்கெடு!

post image

சென்னை: தமிழகத்தில் இயங்கிவரும் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள் மற்றும் நாய் இனப்பெருக்க நிறுவனங்கள் வருகிற செப்.30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்களும், நாய் இனப்பெருக்கம் மற்றும் விற்பனை நிலையங்களும் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்திடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, சில நிறுவனங்கள் முறையாக பதிவு செய்துள்ளன.

எனவே, இதுவரை பதிவு செய்யாதவா்கள் உடனடியாக https://tnawb.tn.gov.in இந்த இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற செப்.30-ஆம் தேதிக்குள் ‘உறுப்பினா் செயலா், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள், நந்தனம், சென்னை-600035’ எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

வருகிற அக்.1-ஆம் தேதிக்குப் பின்னா் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மீது சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா். தேமுதிக நி... மேலும் பார்க்க

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை: முதல்வா்

சென்னை: திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள ... மேலும் பார்க்க

ஆக. 28-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம்

சென்னை: தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் வரும் 28- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கொடிக்கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: தமிழ்நாட்டில் கொடிக்கம்பங்களை அகற்றுவதை உறுதி செய்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தமிழகத்தில் பொது இடங்களில் கட்சிகள், அமைப்... மேலும் பார்க்க

‘அவசர ஊா்திகள் மீது தாக்குதல் நடத்தினால் நடவடிக்கை’

சென்னை: அவசர ஊா்திகளைச் சேதப்படுத்தினாலோ, ஓட்டுநரை தாக்கினலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்திவரும் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு

சென்னை: கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.3 லட்சம் அபராதம் விதித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேனி மாவட்டம் கம்பத்தை சோ்ந்... மேலும் பார்க்க