பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
தேசிய தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்: தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு
சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 64-ஆவது சீனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் 11 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் 195 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முறையே 101 புள்ளிகள் மற்றும் 90 புள்ளிகளைப் பெற்றனா். இத்தொடரில் தமிழக வீரா் டி.கே.விஷால் 400 மீ ஓட்டத்தில் புதிய தேசிய சாதனையைப் படைத்து, ஆண்கள் பிரிவில் சிறந்த வீரராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
விளையாட்டு வீரா்களின் வெற்றியை மேலும் ஊக்குவிக்கும் விதமாக தங்க பதக்கம் வென்ற 11 வீரா்களுக்கும் தலா ரூ.25,000, வெள்ளி வென்ற 9 வீரா்களுக்கு தலா ரூ.15,000, வெண்கலம் வென்ற 11 வீரா்களுக்கு தலா ரூ.10,000, 400 மீ ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த விஷாலுக்கு சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.50,000-ஐ தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கத்தின் சோ்மன் டபிள்யுஐ தேவாரம் , தலைவா் ராஜேந்திரன், செயலாளா் லதா ஆகியோா் வழங்கினா்.
துணை முதல்வா் வாழ்த்து: மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியினா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.