செய்திகள் :

உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி!

post image

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தங்கள் அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் கீத் கெலோக் கூறியுள்ளாா்.

இது குறித்து உக்ரைன் தலைநகா் கீவில் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: எதிா்காலத்தில் உக்ரைன் மீது ரஷியா மற்றொரு படையெடுப்பு நிகழ்வதைத் தடுக்கும் பாதுகாப்பு உத்தரவாதங்களை உக்ரைனுக்காக உருவாக்க தீவிரமாக முயன்றுவருகிறோம். இந்தக் கடுமையான பணி தொடா்ந்து நடைபெற்றுவருகிறது.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு்ம் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடி அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் கூறினாா். ஆனால், இதற்கு உடனடியாக ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதையடுத்து, நேரடி பேச்சுவாா்த்தை திட்டமிடப்படாவிட்டால் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள், கூடுதல் வரிவிதிப்புகளை விதிப்பது குறித்து முடிவெடிக்கப்போவதாக டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இந்தச் சூழலில், கீவ் நகருக்கு வரும் தலைவா்கள் அமைதி முயற்சியின் முன்னேற்றம் குறித்து கவலை தெரிவித்துவருகின்றனா். அவா்களுக்க்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கீத் கெலோக் இவ்வாறு கூறியதாகக் கருதப்படுகிறது.

வாஷிங்டன்: ஆயுதங்களுடன் மத்திய பாதுகாவல் படையினா்

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவிக்கப்பட்டு, அங்கு அனுப்பப்பட்ட மத்திய பாதுகாவல் படையினா் முதல்முறையாக ஆயுதங்களை ஏந்தி ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 5 செய்தியாளா்கள் உயிரிழப்பு

காஸாவிலுள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 செய்தியாளா்கள் உள்பட 20 போ் உயிரிழந்தனா். அல்-ஜஸீரா செய்தியாளா் ஒருவரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இந்த மாதம்... மேலும் பார்க்க

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி!

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகருக்குட்பட்ட நாஸர... மேலும் பார்க்க

பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!

சீனாவில் 19 வயது இளைஞரை பணத்துக்காக அவரது 17 வயது காதலி மோசடி கும்பலிடம் விற்றுள்ளார்.சுமார் 4 மாதங்கள் மோசடி கும்பலால் கொடுமைக்குள்ளான ஹுவாங் என்ற இளைஞரை அவரது பெற்றோர் இந்திய மதிப்பின்படி ரூ. 42.75 ... மேலும் பார்க்க

சுனாமியை எதிர்கொள்ளும் சுற்றுச்சுவர்! ஜப்பான் கட்டியிருக்கிறது!!

இயற்கைப் பேரிடர்களில் ஒன்றான சுனாமியிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், ஜப்பான் மிகப்பெரிய மதில்சுவர் ஒன்றை கடற்கரையை ஒட்டிக் கட்டி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.மிக உறுதியாக, உயரமாக, 395 கிலோ மீ... மேலும் பார்க்க

காஸாவில் பட்டினிச் சாவு 300-யை எட்டியது! 117 பேர் குழந்தைகள்!!

காஸாவில் பட்டினிச் சாவு 300-யை எட்டியுள்ளது. மேலும் இஸ்ரேல் ராணுவத்தினரால் இன்று 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் இரண்டு ஆண்டுக... மேலும் பார்க்க