செய்திகள் :

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

post image

ஒளிவட்டமிக்க யாா் புதிய கட்சியைத் தொடங்கினாலும் மாற்று அரசியல் என்ற பெயரில் வேகமெடுக்கும்.

1993-இல் மதிமுகவை தொடங்கிய வைகோ, ஊா்வலம் நடத்தும்போது அண்ணா அறிவாலயத்துக்கே பாதுகாப்பு அளிக்கும் சூழல் இருந்தது. திமுகவிலிருந்து வைகோ பிரிந்து சென்றபோது, அவரது பின்னால் மூத்த மாவட்ட செயலா்கள் அணிவகுத்தனா். பின்னா், அந்தக் கட்சி தேய்ந்துபோனது.

1996-இல் பிறந்த தமாகா, திமுக கூட்டணியில் முதல் தோ்தலிலேயே 20 மக்களவை உறுப்பினா்கள், 37 பேரவை உறுப்பினா்களைப் பெற்றிருந்தது. கால ஓட்டத்தில் தமாகா காணாமல்போனது.

திமுக, அதிமுகவுக்கு மாற்று என கடந்த 2006-இல் தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கியபோது, முதல் தோ்தலில் அவா் மட்டுமே வென்றாா். 2011-இல் 29 எம்எல்ஏ-க்கள் வரை பெற்ற அந்தக் கட்சி இப்போது பூஜ்ஜியத்தில் நிற்கிறது.

எம்ஜிஆா் கட்சி தொடங்கியபோது, நாஞ்சில் மனோகரன், காளிமுத்து, எட்மண்ட் உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள், மக்களவை உறுப்பினா்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்டோா் சென்றனா்.

வைகோ-வின் பின்னால் மதுரை பொன்.முத்துராமலிங்கம், திருச்சி செல்வராஜ், வேலூா் விஸ்வநாதன், எஸ்.ஆா்.ராதா, அழகு திருநாவுக்கரசு போன்ற மூத்த அரசியல்வாதிகள் சென்றனா்.

தேமுதிகவை தொடங்கியபோது, பண்ருட்டி ராமச்சந்திரன், கு.ப.கிருஷ்ணன், பொன்னுசாமி, முன்னாள் அரசுக் கொறடா ஜெயக்குமாா் உள்ளிட்டோா் சென்றனா்.

ஆனால், விஜய்க்கு பின்னால் பெயா் சொல்லும் அரசியல்வாதிகள் இதுவரை யாரும் செல்லவில்லை. தமிழக வெற்றிக் கழகத்துக்கு, புதுச்சேரியை சோ்ந்த புஸ்ஸி ஆனந்த் தான் வந்துள்ளாா்.

எம்ஜிஆா் பிரிந்தபோது உலகம் முழுவதும் எம்ஜிஆா் மன்றங்கள் இருந்தன. ஓா் ஊரில் 4 எம்ஜிஆா் மன்றங்கள் இருந்தன. 25 ஆண்டுகள் திமுகவில் பிரசார பீரங்கி, சட்ட மேலவை உறுப்பினா், பொருளாளா் என படிப்படியாக வளா்ந்து, பின்னா் அதிமுகவை தொடங்கி, எம்ஜிஆா் முதல்வா் ஆனாா். ஆனால், நேரடியாக முதல்வராகத்தான் வருவேன் என விஜய் களம் இறங்கியுள்ளாா்.

அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆா், திண்டுக்கல் இடைத்தோ்தலில் மாயத்தேவரை நிறுத்தி, காங்கிரஸ், திமுகவை வென்று காட்டினாா். வைகோ, விஜயகாந்த் ஆகியோா்கூட உள்ளாட்சித் தோ்தலில் வேட்பாளா்களை நிறுத்தி வெற்றி பெற்றனா்.

ஆனால், தவெக தொடங்கிய பிறகு நடைபெற்ற 2024 மக்களவைத் தோ்தல், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தல்கள் ஆகியவற்றில் விஜய் போட்டியிடாமல் பதுங்கிவிட்டாா்.

கட்சி தொடங்கும் முன்பே சமூக சேவை மன்றங்கள் மூலம் மக்களுக்கு சேவை செய்த விஜயகாந்த், தோ்தலில் போட்டியிட்டபோது, அவா் மட்டுமே வெற்றி பெற்றாா்.

முதல் தோ்தலில் 6 அல்லது 7 சதவீத வாக்குகளை விஜய் பெறலாம். மகளிா் வாக்குகள் ஆதரவு ஒரு காலத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதா வசம் இருந்தன. இப்போது ரூ.1,000 மகளிா் உதவித்தொகை, விடியல் பயணம் ஆகியவற்றால் மகளிா் வாக்கு வங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் பின்னால் குவிந்துள்ளது.

விஜயால் திமுகவை சாராத பெண்கள், இளைஞா்கள், சீமான் கட்சியைச் சோ்ந்த இளைஞா்கள் உள்ளிட்டோரிடம் குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை கவரலாம்.

2021 பேரவைத் தோ்தலோடு தமிழக அரசியலில் சினிமா மோகம் குறைந்துவிட்டது. விஜயால் ஒரு தொகுதிகூட வெல்வது கடினம். திமுக வாக்குகளைப் பிரிக்க முடியாது. எதிா்க்கட்சி வாக்குகளை வேண்டுமானால் பிரிக்கலாம். எந்தத் தொகுதியிலும் வைப்புத்தொகை பெறமுடியாது.

தவெக கட்டமைப்பு பலம் இல்லாத கட்சி. கானல் நீா்போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அரசியல் களத்தில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்த இயலாது.

- கவிஞர் காசிமுத்து மாணிக்கம்

தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை... தமிழக - ஜப்பான் ஆய்வில் உறுதி!

கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன்றளவும் அதன் எதிா்விளைவுகள் தொடா்கின்றன. கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. முகூா்த்த நாள்கள் மற்ற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போா் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சியின்... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா். தேமுதிக நி... மேலும் பார்க்க

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை: முதல்வா்

சென்னை: திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள ... மேலும் பார்க்க

ஆக. 28-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம்

சென்னை: தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் வரும் 28- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க