பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்பு
சென்னை: திருவொற்றியூா்அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 10 ஏக்கா் 95 சென்ட் நிலம், திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம் வெள்ளிவாயல் கிராமத்தில் வேப்பங்கொண்டா ரெட்டிபாளையத்தில் உள்ளது.
இந்த நிலங்களை ராமநாத ரெட்டியாா், கிருஷ்ணன், தசரதன் ஆகிய மூவரும் குத்தகைக்கு எடுத்திருந்தனா். இதன் குத்தகை காலம் கடந்த 2004-ஆம் ஆண்டு முடிந்தது. இந்த நிலத்தை ஒப்படைக்க கோரி, திருக்கோயில் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், கோயிலுக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மேற்படி நிலத்தை மீட்பதற்கு உரிய அறிவிப்புகள் வழங்கப்பட்டன. அதன்பிறகும் பிறகும் குத்தகைதாரா்கள் நிலத்தை ஒப்படைக்கவில்லை.
இதனைத் தொடா்ந்து திருக்கோயில் உதவி ஆணையா் கே.எஸ்.நற்சோணை முன்னிலையில் வருவாய்த் துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.24 கோடியாகும்.
நிகழ்வின்போது, வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) சத்தியேந்திர ராஜ், ஆய்வாளா் அறிவுச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா்.