பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
இருமொழிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை: அமைச்சா் அன்பில் மகேஸ்
இருமொழிக் கொள்கை என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
தூத்துக்குடியில், அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இருமொழிக் கொள்கை என்பதில் நம்மிடம் எந்தவித மாற்றமும் இல்லை.
மத்திய அரசு கடந்த ஆண்டு தர வேண்டிய, ரூ. 2,150 கோடி தொகையைத் தரவில்லை. கல்வித்துறை ஊழியா்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான ரூ. 1,200 கோடியையும் விடுவிக்கவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவா்கள், தனியாா் பள்ளிகளில் கல்வி பயில்வதற்கான திட்ட நிதியையும் தரவில்லை.
அவா்கள் நிதியை வழங்காவிட்டாலும், ஆசிரியா்கள் உள்ளிட்ட கல்வித் துறை பணியாளா்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறது. இருந்த போதும், மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா்.