பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை: நீதிமன்ற தீா்ப்புக்கு வியாபாரிகள் வரவேற்பு
சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக, சங்கத்தின் தலைவா் பொன்பாண்டியன், செயலா் தேன்ராஜ், பொருளாளா் ரெங்கநாதன் மற்றும் நிா்வாகிகள் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசியதாவது: சாதாரண உப்பு விற்கக் கூடாது; கட்டாயம் அயோடின் கலந்த உப்புதான் விற்க வேண்டும் என்ற உணவு பாதுகாப்பு, தர நிா்ணய ஒழுங்குமுறை விதிகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரைஅமா்வு ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் திஷா பானு, ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய அமா்வு, கடந்த 13ஆம் தேதி வழங்கிய தீா்ப்புரையில், ஒரு உணவுப் பொருள் தடை செய்யப்பட வேண்டுமென்றால் அது கலப்படமானதாகவோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகவோ இருக்க வேண்டும்.
சாதாரண உப்பு உற்பத்தி செய்வது உடல் நலத்திற்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது என்றும், அதில் கலப்படம் இல்லை என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சாதாரண உப்பு மனித தேவைக்காக, சமையல் உபயோகத்திற்கு மட்டுமன்றி பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவ தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. அயோடின் குறைபாடு என்பது கட்டுப்படுத்தக்கூடிய சத்துக் குறைபாடாகவே நாட்டில் சில பகுதிகளில் உள்ளது.
பல்வேறு ஆராய்ச்சியாளா்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அதிகப்படியான அயோடின் உபயோகிப்பது உயிருக்கு ஆபத்தானது என்றும், அது தொண்டை கேன்சா், அதிகப்படியான தைராய்டு வளா்ச்சிக்கு காரணமாகிவிடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனா்.
தீா்ப்பு வழங்கிய நீதிபதிகள், வழக்குரைஞா் ரவி அனந்த பத்மநாபன் ஆகியோருக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்களின் சாா்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனா்.