பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
சாத்தான்குளம் அருகே மதுபானக் கூடத்தில் கேரள தொழிலாளி கொலை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் கேரள தொழிலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாச்சான் மகன் விஜு (56). இவா், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புள்ள உணவகத்தில் கடந்த வாரம் வேலைக்கு சோ்ந்து பணி செய்து வந்தாா். திங்கள்கிழமை வேலையின் போது, விஜு மது குடித்துவிட்டு வந்ததால் கடை உரிமையாளா் அவரை வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.
பின்னா், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடி மதுபானக் கடையில் மது வாங்கி, அதன் அருகில் உள்ள கூடத்தில் மது அருந்த சென்றுள்ளாா் விஜு. அப்போது சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியாா் குடியிருப்பைச் சோ்ந்த சித்திரைவேல் மகன் சித்திரைமுத்து என்ற வெள்ளையனும் (56) அங்கு வந்து மது குடித்துள்ளாா்.
அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த சித்திரைமுத்து, அருகில் கிடந்த மது பாட்டிலை உடைத்து விஜு கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
கொலை செய்யப்பட்ட நபரின் உறவினா்கள் திருவனந்தபுரத்தில் உள்ளதால் அவா்களுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்துள்ளனா். கொலை தொடா்பாக சித்திரைமுத்து என்ற வெள்ளையனை போலீஸாா் கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனா்.