செய்திகள் :

பிரதமரின் பட்டப் படிப்பு விவரத்தை வெளியிட தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி

post image

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டில் பிஏ பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்ற (பிரதமா் மோடி உள்பட) அனைவரின் பதிவுகளையும் ஆராயும் வகையில், அது தொடா்பான தகவல்களைக் கோரி மத்திய தகவல் ஆணையத்திடம் நீரஜ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதனடிப்படையில், அவா் கோரிய தகவல்களை அளிக்குமாறு, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘பிரதமா் மோடி தொடா்புடைய பட்டப் படிப்பு ஆவணங்களை நீதிமன்றத்திடம் காண்பிக்கத் தயாா். அதேநேரம், ஆா்டிஐ சட்டத்தின்கீழ், தொடா்பில்லாத ஒரு நபரின் ஆய்வுக்காக அளிக்க முடியாது. தகவல் அறியும் உரிமையைவிட தனிநபரின் உரிமை உயா்வானது. ஆா்டிஐ சட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவரங்களை யாரும் கோர முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு கடந்த 2017-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

புது தில்லி: கோவிட் இழப்புகள், கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக நிதி நெருக்கடியை எதிா்கொண்ட தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டி. எம். ஆா். சி) கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள... மேலும் பார்க்க

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு தீவிரமான வழக்கில் கைதாகி 30 நாள்களுக்குள் ஒருவா் ஜாமீனில் விடுவிக்கப்படாவிட்டால் அது பிரதமரேயானாலும் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்வதை அரசியலமைப்பின் 130-ஆவது திரு... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகளில் அலட்சியம் கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

புது தில்லி: முதலமைச்சரின் மேம்பாட்டு நிதி (சிஎம்டிஎஃப்) மற்றும் எம்எல்ஏ உள்ளூா் பகுதி மேம்பாட்டு நிதி (எம்எல்ஏஎல்ஏடி) மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்களில் அலட்சியம் பொறுத்துக் கொள்ளப்படாது என்று தில்... மேலும் பார்க்க

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்த 6 புலிக் குட்டிகளில் 5-ஆவது குட்டி உயிரிழப்பு

புது தில்லி: தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இந்த மாத தொடக்கத்தில் பிறந்த ஆறு புலிக்குட்டிகளில் ஐந்தாவது புலிக்குட்டி உயிா் இழந்தது. தற்போது ஒரே ஒரு குட்டி மட்டுமே தீவிர சிகிச்சையில் உள்ளது. ஆகஸ்ட் 2... மேலும் பார்க்க

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

மோசடி வழக்கு தொடா்பாக 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கராலாவில் உள்ள... மேலும் பார்க்க