செய்திகள் :

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!

post image

யேமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், பலியானோரது எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

ஈரானின் ஆதரவுப் பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையினர், இஸ்ரேல் மீது முதல்முறையாக கிளஸ்டர் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.

இந்தத் தாக்குதகளுக்கு பதிலடியாக, ஹவுதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள யேமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல், கடந்த ஆக.24 தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இதில், ஹவுதிகளின் ஒரேயொரு எண்ணெய் நிறுவனம், மின் உற்பத்தி நிலையம், ராணுவத் தளம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, எண்ணெய் நிறுவனம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களில் மட்டும் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 7 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உள்பட 102 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 21 பேரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹவுதிகள் செயல்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் அந்நாட்டுக்குச் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!

The death toll from Israeli airstrikes on the Yemeni capital has risen to 10.

பொன்னிற தலைமுடியுடன் கேத் மிடில்டன்! புதிய தோற்றம் சொல்வது என்ன?

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவியும் அடுத்த பட்டத்து இளவரசியுமான கேத் மிடில்டன், பொன்னிற தலைமுடியுடன் பல்மோரல் அருகே தென்பட்டுள்ளார்.ஆகஸ்ட் 24ஆம் தேதி பல்மோரல் அர... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!

ஆஸ்திரேலியாவில் குறைந்தது இரண்டு யூத எதிர்ப்புத் தாக்குதல்களை ஈரான் அரசு இயக்கியுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிண்டி நகரத்தில் இருந்த உணவகம் மற்று... மேலும் பார்க்க

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் 25% வரிவிதிப்பு நாளை (ஆக.27) முதல் அமலுக்கு வருகிறது.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவிகித வரிகளை வ... மேலும் பார்க்க

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் 7 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.முன்னதாக, இரு நாடுகள் சண்டையில் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டத... மேலும் பார்க்க

உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி!

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தங்கள் அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் கீத் கெலோக் கூறியுள்ளாா். இது குறித்த... மேலும் பார்க்க

வாஷிங்டன்: ஆயுதங்களுடன் மத்திய பாதுகாவல் படையினா்

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவிக்கப்பட்டு, அங்கு அனுப்பப்பட்ட மத்திய பாதுகாவல் படையினா் முதல்முறையாக ஆயுதங்களை ஏந்தி ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்... மேலும் பார்க்க