செய்திகள் :

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!

post image

ஆஸ்திரேலியாவில் குறைந்தது இரண்டு யூத எதிர்ப்புத் தாக்குதல்களை ஈரான் அரசு இயக்கியுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிண்டி நகரத்தில் இருந்த உணவகம் மற்றும் மெல்போர்ன் நகரத்திலுள்ள மசூதி ஆகியவற்றின் மீதான தாக்குதல்களுக்கு, ஈரான் அரசுதான் காரணம் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனைத் தங்களது புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளதாகாவும், கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் துவங்கியது முதல் இந்த இரு ஆஸ்திரேலிய நகரங்களிலும், யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

”ஆஸ்திரேலியாவின் புலனாய்வுத் துறை (ASIO) சேகரித்துள்ள ஆதாரங்களின் மூலம், குறைந்தது 2 தாக்குதல்களையாவது ஈரான் அரசு இயக்கியது தெரியவந்துள்ளது. இதனை ஈரான் அரசு மறைக்க முயல்கிறது" என்று முக்கிய உள்நாட்டு புலனாய்வுத் துறையைக் குறிப்பிட்டு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: 25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

Australian Prime Minister Anthony Albanese has accused the Iranian government of instigating at least two anti-Semitic attacks in Australia.

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!

யேமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், பலியானோரது எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. ஈரானின் ஆதரவுப் பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையினர், இஸ்ரேல் மீது முதல்முறையாக கிளஸ்டர் குண்டுகள் மூலம... மேலும் பார்க்க

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் 25% வரிவிதிப்பு நாளை (ஆக.27) முதல் அமலுக்கு வருகிறது.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவிகித வரிகளை வ... மேலும் பார்க்க

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் 7 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.முன்னதாக, இரு நாடுகள் சண்டையில் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டத... மேலும் பார்க்க

உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி!

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தங்கள் அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் கீத் கெலோக் கூறியுள்ளாா். இது குறித்த... மேலும் பார்க்க

வாஷிங்டன்: ஆயுதங்களுடன் மத்திய பாதுகாவல் படையினா்

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவிக்கப்பட்டு, அங்கு அனுப்பப்பட்ட மத்திய பாதுகாவல் படையினா் முதல்முறையாக ஆயுதங்களை ஏந்தி ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 5 செய்தியாளா்கள் உயிரிழப்பு

காஸாவிலுள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 செய்தியாளா்கள் உள்பட 20 போ் உயிரிழந்தனா். அல்-ஜஸீரா செய்தியாளா் ஒருவரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இந்த மாதம்... மேலும் பார்க்க