செய்திகள் :

குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்த பிக்பாஸ் பிரபலம்! புனிதத்தை மீட்க பரிகாரப் பூஜை!

post image

குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்து இஸ்லாமிய பெண் ரீல்ஸ் எடுத்த நிலையில், பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு புனிதத்தன்மையை மீட்கும் பரிகாரப் பூஜை நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேரளத்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயிலின் குளத்தில் கால்களை நனைத்து ரீல்ஸ் எடுத்த விடியோ இணையத்தில் வைரலானது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், தனது விடியோவை நீக்கிய ஜாஸ்மின் ஜாஃபர், மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த நிலையில், கோயில் கட்டுப்பாடுகளை மீறி குளத்தின் புனிதத்தை ஜாஸ்மின் ஜாஃபர் அசுத்தம் செய்துவிட்டதாக கோயில் நிர்வாகம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மேலும், இன்று (ஆக. 27) பிற்பகல் 1 மணிவரை கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு, குளத்தின் புனிதத்தன்மையை மீட்க பரிகாரப் பூஜை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூஜைகள் தொடர்ந்து 6 நாள்கள் நடத்தப்படும் என்றும் கட்டுப்பாடுகளுக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, கோயிலில் தடை செய்யப்பட்ட பகுதியான குளத்தில் கேரள உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ரீல்ஸ் எடுத்த ஜாஸ்மின் ஜாஃபருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

ஜாஸ்மின் ஜாஃபர், மலையாள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss celebrity dips feet in Guruvayur temple pond : Parikaram Pooja to restore sanctity

இதையும் படிக்க : ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம்! ஒரே நேரத்தில் 2 படங்கள்!

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

திருவிழாக்கள், பண்டிகை நாள்களையொட்டி பயணம் மேற்கொள்ள, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடுமையான சவாலானதாக மாறிவிட்டிருப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணிகள், ... மேலும் பார்க்க

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில, 26 வயதே ஆன நிக்கி பாட்டி, வரதட்சிணைக்காக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தல் திடீர் திருப்பமாக கணவர் விபின் பாட்டி மீது ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்ப... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மூழ்கிய 170 கிராமங்கள்: ஒடிசாவில் 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வடக்கு ஒடிசாவின் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 170-க்ம் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலசோர், பத்ராக் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டங்களில் உள்ள 170க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனம்.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் உற்பத்தி ஆலையில் மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான இ-விட்டாராவை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி இ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழ்நாடு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று 2 நாள் அரசு முறைப் பயணமா... மேலும் பார்க்க

டிரம்ப் வரி: பிற பொருள்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் இதன் விலை மட்டும் மாறாதது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருள்களுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரி ஆக.27 முதல் நடைமுறைக்கு வருவதன் காரணமாக பல பொருள்கள் விலை உயர்ந்தாலும், ஆப்பிள் ஐஃபோன்களின் விலை மட்டும் மாற்றமின்ற... மேலும் பார்க்க