காதலியிடமிருந்து வந்த கடிதம்; 500 புஷ்அப்ஸ் செய்து பெற்ற ராணுவ அதிகாரி - `ஓர்' அ...
"செலவை விட அனுபவமே முக்கியம்" – குறைந்த செலவில் ஐரோப்பாவைச் சுற்றிய இந்தியப் பெண்; எப்படி தெரியுமா?
பொதுவாக ஐரோப்பா பயணம் என்றாலே அதிக செலவான, எளிதில் செல்ல முடியாத பயணமாக இருக்கும்.
ஆனால், இந்தியாவைச் சேர்ந்த கனக் அகர்வால் என்ற ஐஐடி பட்டதாரி, ஒரு ஐபோனின் விலையை விட குறைவான செலவில் நான்கு ஐரோப்பிய நாடுகளை ஒரு மாதத்திற்கும் மேலாகச் சுற்றிப் பார்த்திருக்கிறார். எப்படி அவர் இதனைத் திட்டமிட்டார், பின்னால் இருக்கும் ரகசியம் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
தனது வேலையை விட்டுவிட்டு கனக், தனியாக ஐரோப்பியப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார். 35 நாட்களில், நெதர்லாந்து, பிரான்ஸ், ப்ராக் (செக் குடியரசு) மற்றும் புடாபெஸ்ட் (ஹங்கேரி) ஆகிய இடங்களை வெறும் 1 லட்சம் ரூபாய் செலவில் அதுவும் விமான கட்டணம் உட்பட சுற்றிப்பார்த்திருக்கிறார்.

செலவில்லா தங்குமிடம்
கனக் தனது பயணத்தை நெதர்லாந்தில் உள்ள ஒரு சுற்றுச்சூழல் கிராமத்தில் தன்னார்வப் பணியில் தொடங்கினார். இதன் மூலம், இரண்டு வாரங்களுக்குத் தங்குமிடமும் உணவும் இலவசமாகக் கிடைத்தது.
“நான் ஒரு சுற்றுலாப் பயணியாக இடங்களைப் பார்வையிட விரும்பவில்லை, உள்ளூர் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினேன்” என்று கனக் கூறியிருக்கிறார். இதனால் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமுக்கு அருகிலுள்ள கிராமப்புற வாழ்க்கையைச் செலவில்லாமல் அனுபவித்தார் கனக்.
உள்ளூர்வாசிகளுடன் தங்குதல்
நெதர்லாந்து மற்றும் ப்ராக்கில், கனக் ‘கவுச்சுர்ஃபிங்’ (Couchsurfing) முறையைப் பயன்படுத்தினார். இதன் மூலம், உள்ளூர் மக்களின் வீடுகளில் தங்கி, பணத்தை மிச்சப்படுத்தியதோடு, அவர்களுடன் நட்பை வளர்த்தார். இவர்கள் அவருக்கு உள்ளூர் இடங்களை அறிமுகப்படுத்தினர்.
நெதர்லாந்தில் 20 நாட்கள் செலவழித்த பிறகு, திடீரென பாரிஸில் உள்ள தனது நெருங்கிய நண்பரைச் சந்திக்க முடிவு செய்தார். ஒரு பேருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்து, பாரிஸுக்குப் பயணித்தார். அங்கு அவரது நண்பர் அவரை மகிழ்ச்சியுடன் தங்க வைத்தார்.

கனக், செலவு குறைவான இடங்களைத் தேர்ந்தெடுத்தார். ப்ராக் மற்றும் புடாபெஸ்ட் ஆகியவை வரலாற்று செழுமையை வழங்கினாலும் மற்ற ஐரோப்பிய இடங்களைப் போல செலவு அதிகமாக இல்லை.
கனக் அகர்வாலின் இந்தப் பயணம், பெரிய பட்ஜெட் இல்லாமால், சரியான திட்டமிடல் மற்றும் பயணத்தின் மீதான ஆர்வம் ஐரோப்பாவை அனுபவிக்க வைத்திருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...