மாநில கல்விக் கொள்கையில் நெகிழ்வுத் தன்மையை உருவாக்குவோம்: அன்பில் மகேஸ்
Nude Cruise Trend: பிரபலமாகும் அடையில்லா கப்பல் பயணம்; ஆர்வம் காட்டும் பயணிகள்; என்ன காரணம்?
அமெரிக்காவைச் சேர்ந்த ’பேர் நெசசிட்டீஸ்’ (Bare Necessities) என்ற நிறுவனம், பயணிகள் உடை அணியாமல் (Nude Cruise) செல்லும், கப்பல் பயணங்களை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தப் பயணங்களின் நோக்கம், பயணிகள் தங்களின் உடலை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதையும், தன்னம்பிக்கையுடன் வாழ்வதையும் ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி உடை இல்லாமல் மேற்கொள்ளப்படும் பயணத்தில் ஒழுக்கம் மற்றும் மரியாதை காக்கும் வகையில் சில கடுமையான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கப்பலில் விதிகள் என்ன?
கப்பலின் எல்லா இடங்களிலும் நிர்வாணமாகச் செல்ல அனுமதி இல்லை.
உணவகங்களில், கப்டனின் வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் போது உடை அணிய வேண்டும்.
கப்பல் துறைமுகத்தில் நின்றாலும் உடை கட்டாயம். பஃபே பகுதியில் மட்டும் சற்றே தளர்வு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கப்பலில் “புகைப்படம் எடுக்க தடை செய்யப்பட்ட பகுதிகள்” (No-photo zones) உள்ளது.
இந்தப் பயணத்தின்போது யாராவது தவறாக நடந்துக்கொண்டால் அல்லது விதிகளை மீறினால் அந்தப் பயணி உடனடியாக அடுத்த துறைமுகத்தில் இறக்கிவிடப்படுவார், பணமும் திருப்பி வழங்கப்படாது என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை
இந்தப் பயணத்தின் டிக்கெட் விலை அதிகபட்சம் ரூ. 43 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்றவர்கள் இதை “வாழ்க்கையின் சிறந்த பயணம்”, “மறக்க முடியாத அனுபவம்” என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
நிறுவனம், அடுத்த பயணத்தை 2025 அக்டோபர் 26 முதல் நவம்பர் 9 வரை ‘தி ஸீனிக் எக்லிப்ஸ’ (The Scenic Eclipse) கப்பலில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.