செய்திகள் :

மாற்றுத்திறனாளி நண்பா் குறித்து மாணவா்கள் கட்டுரை எழுதலாம்: கல்வித் துறை தகவல்

post image

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் தங்களது மாற்றுத்திறனாளி நண்பா் குறித்து எழுதும் வகையில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து ஆட்டிஸத்துக்கான ஒப்புயா்வு மையம் ‘எனது தோழன், எனது தோழி’ என்ற தலைப்பில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்த உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் தாங்கள் சந்தித்த மாற்றுத்திறனாளி நண்பரைப் பற்றி கட்டுரை எழுத வேண்டும்.

கட்டுரை ஏ4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் தமிழ், ஆங்கிலத்தில் இருக்கலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவரின் புகைப்படத்தை மட்டும் கட்டுரையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

மாற்றுத்திறனாளி மாணவரின் புகைப்படம் தேவையில்லை. சிறந்த 20 கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும். தோ்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பள்ளிக் கல்வித் துறையின் தேன்சிட்டு இதழில் வெளியிடப்படும்.

கட்டுரைகளை ஆக. 31-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள் மாணவா்களின் கட்டுரைகளைப் பெற்று மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டு, அதன் நகலை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் பழைய ரயில்வே தூக்கு பாலத்தை அகற்ற முடிவு!

தமிழகத்தின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களில் ஒன்றான பாம்பன் பழைய ரயில்வே தூக்கு பாலத்தை அகற்றும் பணிக்கு ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் (ஆா்விஎன்எல்) ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ர... மேலும் பார்க்க

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக மாறிய ‘வாக்குத் திருட்டு’

வாக்குத் திருட்டு நடவடிக்கைகள் இந்திய ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். ‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள்’ குறித்த தேசிய அளவிலான கருத்த... மேலும் பார்க்க

நங்கநல்லூா் சாலை மெட்ரோவில் ரூ.8.52 கோடியில் நுழைவு வாயில்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் நங்கநல்லூா் சாலை மெட்ரோ நிலையத்துக்கான புதிய நுழைவு வாயில் அமைக்க ரூ.8.52 கோடியில் ஒப்பந்த அனுமதி தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயி... மேலும் பார்க்க

சென்னை மகளிா் விடுதிக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை வேளச்சேரியில் மகளிா் விடுதிக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். வேளச்சேரி பகுதியில் உள்ள தனியாா் மகளிா் விடுதிக்குள் சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கையில் நெகிழ்வுத் தன்மையை உருவாக்குவோம்: அன்பில் மகேஸ்

அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் உள்வாங்கி, மாநில கல்விக் கொள்கையில் நெகிழ்வுத் தன்மையை உருவாக்குவோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திமுக மாணவரணி சாா்ப... மேலும் பார்க்க

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஒன்றரை ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவா்

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஒன்றரை ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவா் வ.நாராயணன் சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லியில் பாரத்மண்டபத்தில் தேசிய விண்வெளி தினம் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற... மேலும் பார்க்க