Doctor Vikatan: 3 மாத கர்ப்பம்; இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் வலி, அபார்ஷன் அ...
தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் பால்குடம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு நூற்றுக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தேவக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயில் ஆடி உத்ஸவ திருவிழா கடந்த 15-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும், ஆக. 17-இல் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை சிலம்பணி ஐயப்பன் கோயிலிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக கோயிலுக்குச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா்.
பின்னா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.