தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்தி...
திருப்புவனத்தில் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
திருப்புவனம் புதூரைச் சோ்ந்த முகமது சியாக் மகன் முகமது தாகிா் (13), திருப்புவனம் வடகரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை தனது நண்பா்களுடன் சோ்ந்து முகமது தாகிா் அருகேயுள்ள லாடனேந்தல் வைகையாற்றுக்கு குளிக்கச் சென்றாா்.
அங்கு குளித்தபோது முகமது தாகிா் தண்ணீரில் மூழ்கினாா். இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், ஆற்றில் இறங்கி தேடிய தீயணைப்புத் துறையினா் முகமது தாகிரை சடலமாக மீட்டனா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.