அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து திருச்சி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்.., முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார். நிறைய பேர் பேசுகிறார்கள். பாஜக 1,600 எம்எல்ஏக்கள் உள்ள கட்சி. 330 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள மிகப்பெரிய கட்சி. உலகத்தில் எந்த நாட்டுக்கு போனாலும் அவர்களுக்கென்று தனி மரியாதை இருக்கின்ற ஒரே தலைவர் பிரதமர் மோடி.
யாரோ ஒருவர் பொருந்தா கூட்டணி என சொல்வது அவர்கள் எத்தனை எம்எல்ஏக்களை கையில் வைத்துள்ளனர். எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களை கையில் வைத்துள்ளனர். எத்தனை கவுன்சிலர்களை வைத்துள்ளனர். ஒருவரைப் பற்றி சொல்வதற்கு காரண காரியம் வேண்டும். திமுக அரசு மக்கள் விரும்பத்தகாத அரசு. சிறுமி முதல் 70 வயது பெண்கள் வரை பாலியல் பலாத்காரம். எங்கு பார்த்தாலும் மதுபோதை பழக்கம். இது தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் 59 சதவீதம் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடக்கிறது. 125 சதவீதம் சிறு குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டல் நடக்கிறது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது போதை பழக்கத்தோடு வருகின்றனர். ஆசிரியர்கள் இல்லாத பற்றாக்குறை. சொத்து வரி, மின் கட்டண வரி அதிகரித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் வீட்டு காவலில் இல்லை. அவர் சுதந்திரமாக தான் இருக்கிறார். இதுபோன்று தமிழகத்தில் தான் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை
பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. அதனை ஊடகங்கள் சொல்வதே இல்லை. எங்கள் கூட்டணி கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முடிந்த பிறகு அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் முடிவு . எடப்பாடி பழனிசாமி யாரும் மன வருத்தமில்லை. நாம் தோற்றுப் போகும் என்று நினைப்பவர்கள் தான் மன வருத்தத்தில் உள்ளனர். திமுகவின் பி டீமாக நிறைய பேர் உள்ளனர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான். திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் நிச்சயமாக வருவார்கள். காலம் நிறைய இருக்கிறது. வளமான கூட்டணி தான் வெற்றி பெறும். இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. 2011 அனைத்துக் கட்சிகளும் ஜாதிகளும் திமுக கூட்டணியில் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆனால் ஜெயலலிதா தான் வெற்றி பெற்றார். எம்ஜிஆர் கொள்கைகளை கடைப்பிடிக்கின்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்றார்.