செய்திகள் :

பாஜக வெற்றி பெற்றால் மட்டும் தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பதா? -எதிர்க்கட்சிகளுக்கு பாஜக கேள்வி!

post image

பாஜக வெற்றி பெற்றால் மட்டும் தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பதா? என்று ராகுல் காந்திக்கு பாஜக கேள்வியெழுப்பியது.

கடந்தாண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘வாக்குத் திருட்டு’ நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியுள்ள பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதைக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் சென்று சேர்க்கும் விதமாக ‘வாக்குரிமைப் பேரணி’ என்ற பெயரில் பிகாரில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் எதிர்க்கட்சிகளை விமர்சித்து தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக பேசியிருப்பதாவது:

“ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் வாக்குத் திருட்டை அனுமதிக்க மாட்டோம் என்று தொடர்ந்து சொல்லி வருகின்றனர். வாக்குத் திருட்டு என்று அவர்கள் குறிப்பிடுவது முற்றிலும் பொய் மற்றும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகும்.

உங்களுக்கு(எதிர்க்கட்சிகள்) ஆதரவாக மக்கள் வாக்கு செலுத்தினால், அப்போது மட்டும் தேர்தல் ஆணையம் நல்லதாகப் படுகிறது, நீங்கள் தேர்தலில் தோற்கும்போது அதன் மீது குற்றச்சாட்டை சுமத்துகிறீர்கள்.

ஹிமாசல பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் நீங்கள் வெற்றி பெறும் போது, தேர்தல் ஆணையத்தை நன்றாகக் குறிப்பிடுகிறீர்கள், தோற்றால் மோசமாக குறிப்பிட்டு பேசுகிறீர்கள். மகாராஷ்டிரத்தில் நீங்கள் தோற்றதால் தேர்தல் ஆணையத்தை மோசம் என்கிறீர்கள். மகாராஷ்டிரத்தில் நீங்கள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டீர்கள். தில்லியிலும் அரவிந்த் கேஜரிவால் நீக்கப்பட்டுவிட்டார்.

ராகுல் காந்தியும் காங்கிரஸும் வாக்கு பெறாவிட்டால், அதற்கு பாஜக என்ன செய்ய முடியும்? பெகாசஸ் வழக்கில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளபோதிலும், அவர்கள் தரப்பிலிருந்து விசாரணைக்காக கைப்பேசிகளை வழங்க மறுக்கிறார்கள். மேலும், இவ்விவகாரத்தில் அவர்கள் ஊடகத்தையும் அவமதித்திருக்கிறார்கள்.

பிகாரில் பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உருவாக்குவதன் மூலம், எங்களது பொறுமையை சோதிக்கிறீர்கள். இதனை சகித்துக்கொண்டிருக்க மாட்டோம்.

பிரதமர் மோடியைப் போல ஒரு பொய் பேசும் மனிதரைப் பார்த்ததேயில்லை என்கிறார் தேஜஸ்வி யாதவ். இப்படியெல்லாம் பேசித்தான் பிகார் முதல்வராக வர வேண்டுமென அவர் ஆசைப்படுகிறார் போலும்? மோடியின் தலைமையின்கீழ், இந்திய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதையடுத்து, தேஜஸ்வி யாதவ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். ஏற்கெனவே மக்கள் அவருக்கு வாக்கு செலுத்த முன் வரவில்லை. இந்த நிலையில், இது மேலும் அவரை மக்கள் நிராகரிக்க வழிவகை செய்யும். ராகுல் காந்தியுடன் சேர்ந்துகொண்டு தேஜஸ்வி யாதவ், தனது சொந்தக் கட்சியை மூழ்கடித்து வருகிறார்” என்றார்.

Ravi Shankar Prasad accuses Rahul Gandhi, Tejashwi Yadav of defaming Election Commission

வரதட்சிணைக்காக மனைவி எரித்தே கொலை: “இதெல்லாம் சாதாரண விஷயம்” -கணவன் பதில்!

மனைவி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் கணவனை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.வட இந்தியாவில் தில்லியை அ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்(20) வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்ற சுவரில்... மேலும் பார்க்க

ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் விசாரிப்பு

கிஷ்த்வார் வெள்ளப்பெருக்கில் காயமடைந்தவர்களிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் விசாரித்தார். இதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் ஜம்மு வந்தடைந்த அவர், ஜம்மு அரசு... மேலும் பார்க்க

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 36 லட்சம் வரதட்சிணைக் கேட்டு மனைவியை தீயிட்டு எரித்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையிடமிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியவரை காவல் துறையினர் காலுக்கு கீழே சு... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவரால் பரபரப்பு நிலவியது. தெலங்கானா மாநிலம், மெடிபள்ளியில் உள்ள அவர்களது வீட்டில் கணவர் தனது மனைவியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டா... மேலும் பார்க்க

என்கவுன்டரில் சுட வேண்டும்: வரதட்சிணை கொடுமையால் இறந்த பெண்ணின் தந்தை!

வரதட்சிணைக் கேட்டு தனது மகளை உயிருடன் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டரில் சுட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். மாமியார் வீட்டில் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும், தனியாக ... மேலும் பார்க்க