மதராஸி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை
தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்(20) வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றார். ஆனால் அவர் பாதுகாப்புப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், மனநிலை சரியில்லாதவராக அவர் இருந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
எல்லைச் சுவரையொட்டிய ஒரு மரத்தில் ஏறி நாடாளுமன்றத்திற்குள் அவர் நுழைய முயன்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து உளவுத் துறை உள்பட பல மத்திய அமைப்புகள் ராமிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்திரன்
இதுகுறித்து ராமின் மூத்த சகோதரர் உமேஷ் குமார் கூறுகையில், ராமுக்கு இந்தி படிக்கத் தெரியாது.
அவர் பணிபுரிந்த சூரத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் தற்செயலாக தில்லிக்கு தவறான ரயிலில் சென்றிருக்கலாம். மேலும் ஏதோ தெரியாத ஆபத்திலிருந்து தஞ்சம் அடைய தனது சகோதரர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றிருக்கலாம்.
அதிகாரிகள் ராமுக்கு எதிராக எந்த ஆட்சேபனைக்குரிய அல்லது சந்தேகத்திற்கிடமான ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை.
எனவே அவரை தந்தையிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய அமைப்புகளின் விசாரணைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ராமை தில்லி போலீஸார் ஒப்படைத்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.