செய்திகள் :

கில்லர் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

post image

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கில்லர் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தமிழில் குஷி, வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, கில்லர் என்கிற படத்தின் மூலம் மீண்டும் இயக்குராக களமிறங்கியுள்ளார்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எஸ்.ஜே.சூர்யா சார்பில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.

இந்த நிலையில், கில்லர் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். இது முடிந்ததும், மீண்டும் கில்லர் படப்பிடிப்பைத் துவங்குவார்.

இதையும் படிக்க: ராஜமௌலி படத்தின் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்!

sj surya's killer movie schedule shoot wrapped

மலரும்... ஆஷிகா ரங்கநாத்!

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு... மேலும் பார்க்க

ராஜமௌலி படத்தின் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்!

இயக்குநர் ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் போஸ்டரை ஜேம்ஸ் கேமரூன் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எ... மேலும் பார்க்க

தலைவன் தலைவி வசூல் எவ்வளவு? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தலைவன் தலைவி படத்தின் வசூல் ரூ. 100 கோடியைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரை... மேலும் பார்க்க

பிருத்விராஜின் புதிய படம்!

நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.தமிழ், மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பிருத்விராஜ் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிஃபர், ப்ரோ டாட... மேலும் பார்க்க

விஷால் - 35 படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 35-ஆவது படத்தில் நடித்து வருகிறார்.சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது பட... மேலும் பார்க்க

சில நேரங்களில் சினிமா என்பது... சௌபின் சாகிர் நெகிழ்ச்சி!

கூலி திரைப்படத்தின் அனுபவம் குறித்து நடிகர் சௌபின் சாகிர் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ர... மேலும் பார்க்க