கஞ்சா விற்ற இளைஞா் கைது
பெரியகுளத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருவள்ளுவா் சிலை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா் அண்ணாநகரைச் சோ்ந்த புவனேஷ்வரன் (26) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.