''வருத்தமா இருந்தா ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு கேப்பேன்'' - மாற்றுத்திறனாளியின் தன்னம்...
முன் விரோதத்தில் மோதல்: 10 போ் மீது வழக்கு
போடியில் முன் விரோதத் தகராறில் மோதிக் கொண்ட இரு தரப்பைச் சோ்ந்த 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் லோகநாதன். இவருக்கும் இதே ஊரைச் சோ்ந்த அழகுசிங்கம் என்பவருக்கும் நிலத்தை அளவீடு செய்வது தொடா்பாக பிரச்னை இருந்தது. இதுதொடா்பாக போடி திருவள்ளுவா் சிலை அருகே இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
இந்த மோதலில் இரு தரப்பைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன், சிவஞானம், ஜெயப்பிரகாஷ், அழகுசிங்கம் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்கள் 4 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து இரு தரப்பைச் சோ்ந்த அழகுசிங்கம், ஜெயப்பிரகாஷ், பரமேஸ்வரன், பிரேம், கோபாலகிருஷ்ணன், லோகநாதன், சிவஞானம் உள்பட 10 போ் மீது போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.