செய்திகள் :

Manjima Mohan: "உடல் எடையைக் குறைக்க சர்ஜரிகூட செய்ய நினைத்தேன்; ஆனால்" - மஞ்சிமா மோகன் ஓப்பன் டாக்

post image

மலையாளத் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2015-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் நாயகியாக திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் மஞ்சிமா மோகன்.

தமிழில் கௌதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா (2016)' படத்தின் மூலம் சிம்பு உடன் ஜோடி சேர்ந்து அறிமுகமான மஞ்சிமா, அந்தப் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து 'சத்ரு', 'இபோத் எந்நைக்கு', 'தீபம்', 'துருவங்கள் 16' போன்ற படங்களில் நடித்தார். பிறகு, கெளதம் கார்த்திக்குடன் 'தேவராட்டம்' படத்தில் நடித்து, அவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

கௌதம் கார்த்தி - மஞ்சிமா
கௌதம் கார்த்தி - மஞ்சிமா

இந்நிலையில், சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் உடல் எடை குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் மஞ்சிமா, "சினிமாதான் என்னுடைய வாழ்க்கையின் ஒரு அங்கம். நிறையப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. உடல் எடையைக் குறைத்தால் நிறைய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

நானும் இந்த உடல் பருமனைக் குறைக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். அது நடக்கிறமாதிரி தெரியல. சர்ஜரிகூட பண்ணிடலாம்னு யோசிச்சேன்.

எனக்கு PCOD பிரச்னை இருக்கு. அதனால கொஞ்சம் எடை அதிகமாக இருக்கிறேன். உடல் எடையைவிடவும், PCOD பிரச்னையைச் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன். அதனால் உடல் எடையைப் பற்றி எனக்கு இப்போது கவலையில்லை" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Soubin Shahir: "சில சமயங்களில் சினிமா கனவுகளுக்கு அப்பாற்பட்டது" - Coolie குறித்து நெகிழும் செளபின்

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் 'கூலி' திரைப்படம் வெளியாகியிருந்தது. Coolie Team - Soubin Shahirதமிழ் சினிமா பிரபலங்களைத் தாண்டி மலையாளத்திலிருந்து செளபின் ஷாஹிர், ... மேலும் பார்க்க

Rajinikanth: ``அழகான தருணம்" - ரஜினிகாந்த்தைச் சந்தித்தது குறித்து சிம்ரன் நெகிழ்ச்சி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த், ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ரச்சிதா ராம் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த கூலி திரைப்படம், ஆகஸ... மேலும் பார்க்க

Indra Review: உளவியல் கோணத்துடன் மிரட்டும் சீரியல் கில்லர் கதை; ஐடியா ஓகே, திரைக்கதை?!

சென்னையில் அபி (சுனில்) தொடர் கொலைகள் செய்கிறார். கொலைகளைச் செய்து விட்டு சடலத்திலிருந்து வலது கை மணிக்கட்டை வெட்டி எடுக்கிறார். மறுபுறம், மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டு, ... மேலும் பார்க்க

What to watch - Theatre & OTT: இந்திரா, கேப்டன் பிரபாகரன், Nobody 2, தலைவன் தலைவி

இந்திரா (தமிழ்)இந்திராசபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, மெஹ்ரீன், அனிஹா, சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இந்திரா'. சீரியல் கில்லர் பற்றிய விருவிருப்பான காவல் ... மேலும் பார்க்க