உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு ...
Rajinikanth: ``அழகான தருணம்" - ரஜினிகாந்த்தைச் சந்தித்தது குறித்து சிம்ரன் நெகிழ்ச்சி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த், ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ரச்சிதா ராம் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த கூலி திரைப்படம், ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வந்தது.
இந்த நிலையில், நடிகை சிம்ரன் ஒரு பேட்டியில், ``நான் ரஜினி சாரின் ஒரு பெரிய ரசிகை. கூலி படத்தைப் பார்த்தேன். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நான் எப்போதும் ரஜினி சார் நடித்த அனைத்துப் படங்களையும் பார்ப்பேன். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு கூலி படம் வெற்றிப்படம்தான்.
கதையின் உள்ளடக்கம் நன்றாக இருந்தால் மட்டுமே எல்லோரும் அதை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ரஜினி சார் தனது சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். கதையும் எனக்குப் பிடித்திருந்தது" என்றார்.
அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தின் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதற்கான வாழ்த்தையும் தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில், ``வெள்ளித்திரையிலிருந்து மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களுக்கு, உங்கள் மாயாஜாலம் வந்து சேர்ந்திருக்கிறது.
ஸ்டைல், ஸ்டார் என எப்படி இருந்தாலும், எளிமையையே கைகொள்ளும் மனிதர் ரஜினி சார். உங்களுடன் பணிபுரிவது ஒரு பாக்கியம். சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்!" எனப் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், இன்று அவரின் எக்ஸ் பக்கத்தில் "சில சந்திப்புகள் காலத்துக்கு அப்பாற்பட்டவை. அழகான தருணத்தைப் பகிர்ந்ததற்காக நன்றியுள்ளவளாக இருப்பேன்" எனக் குறிப்பிட்டு, நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
28 words / 318 characters