செய்திகள் :

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

post image

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

புது தில்லியில் நடைபெற்றதனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தாண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் சந்தைக்கு வரும்.

இந்திய தொழில்நுட்பத்துடன் 6ஜி சேவையைக் கொண்டுவருவதிலும் நாங்கள்(மத்திய அரசு) செயலாற்றி வருகிறோம்.

இந்தியாவில் கடந்த 50 - 60 ஆண்டுகளுக்கு முன்னரே, செமிகண்டக்டர் தயாரிப்பு தொடங்கப்பட்டிருக்கலாம் என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்தியா அதனை தவற விட்டுவிட்டது. அதன்பின், அது நிறைவேற பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால், இன்று நாங்கள் அந்த நிலைமையை மற்றியுள்ளோம். செமிகண்டக்டர் தொடர்பான தொழிற்சாலைகள் இந்தியாவில் வரத் தொடங்கியுள்ளன” என்றார்.

By the end of this year, the first Made in India chip will come in the market

நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘நாடு முழுவதும் ஏராளமான மாணவா்கள் சட்டக் கல்வியைப் பயிலும் நிலையில், அதை வலுப்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். கோ... மேலும் பார்க்க

திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளியதாக மத்திய அமைச்சா் மீது குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முா்ஷிதாபாத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபு தாஹிா் கானை மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு கீழே தள்ளியதாக குற்றஞ்சாட்டி அவா் மீது நடவடிக்கை கோரி மக்களவைத் தலை... மேலும் பார்க்க

பல்வேறு மாநிலங்களில் மழை - வெள்ளம்: பிகாரில் ஆற்றில் மூழ்கி 5 போ் பலி

பிகாரின் பூா்னியா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து போ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூா்னியா மாவட்டத்தின் கஸ்பா பகுதியில் உள்ள கரி கோசி ஆற்றில்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகம் அருகே ‘சந்தேக’ நபா் கைது

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே சனிக்கிழமை 20 வயது மதிக்கத்தக்க சந்தேகத்திற்கிடமான நபரை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகள் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அந்த நபரை சிஐ... மேலும் பார்க்க

திமுக, கூட்டணி எம்.பி.க்களை இன்று சந்திக்கிறாா் சுதா்சன் ரெட்டி

‘இண்டி’ கூட்டணி குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி, சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளாா். முன்னதாக, அவா் முதல்வரும் திமுக தலை... மேலும் பார்க்க

இந்தியா-ஆஸ்திரேலியா வா்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நிறைவடைந்தது. இருநாடுகளிடையே கடந்த 2022, டிசம்பரில் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மே... மேலும் பார்க்க