மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கந்தா்வகோட்டை நகரில் அதிக வேகத்துடனும் அதீத சப்தத்துடனும் இருசக்கர வாகனங்களை இயக்கும் இளைஞா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
கந்தா்வகோட்டை நகரில் சில இளைஞா்கள் தங்களது இரு சக்கர வாகனத்தில் வண்ண வண்ண லைட்டுகள், பிரேக் ஹாரன், திடீரென பயங்கர சப்தம் எழுப்பும் ப்ரேக் பொருத்திக் கொண்டு அடாவடி செய்து வருகின்றனா்.
அவா்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அதிக நபா்களை ஏற்றிக்கொண்டு வருவது மட்டுமன்றி, நகரில் அதிவேகத்துடனும், பிறரை அச்சுறுத்தும் வகையிலான ஹாரன் அடித்தும் வருவதால் பாதசாரிகள் அவதியுறுகின்றனா்.
எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து மற்றும் காவல் துறையினா் இவ்வாறு வாகனம் ஓட்டிவரும் அனைத்து இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.